ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனாவால், பெரும் ஆவலை ஏற்படுத்திய ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் டெலிவிரி பணிகளில் தள்ளி வைக்கப்பட உள்ளது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, வாகன உற்பத்திப் பணிகள் அடியோடு முடங்கியுள்ளன. அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்து வாகன நிறுவனங்களும் ஆலைகளை மூடி வைத்துள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனமும் பீதம்பூரில் உள்ள ஆலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

இங்குதான் ஜாவா பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கனவே, ஜாவா பைக்குகளின் டெலிவிரி பணிகள் மிகுந்த தாமதமாக நடந்து வருவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார்களும், குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் ஜாவா பைக்குகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால், டெலிவிரி பணிகள் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

மேலும், அந்நிறுவனத்தின் ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் டெலிவிரி குறித்து கடும் அதிருப்தி இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 2 முதல் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் டெலிவிரி பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

வால் இல்லாத வடிவமைப்புடன் கூடிய இந்த பாபர் வகை ஜாவா பெராக் பைக்கின் மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆவல் கொண்டு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதுடன், ஷோரூம்களும் மூடப்பட்டு இருப்பதால், இந்த பைக்கின் டெலிவிரி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

பிஎஸ்6 விதிகள் அமலுக்கு வரும்போது ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரியை துவங்குவதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த பைக்கை டெலிவிரி பெற ஆவலுடன் காத்திருப்பவர்கள் மேலும் சில காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 334சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!

புதிய ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பைக்கிற்கு நேரடியாக போட்டி இல்லை. இது தனித்துவமான டிசைனில் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் பாபர் வகை பைக் மாடலாக இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa is planning to postpone the Perak Bobber bike delivery in India due to corona outbreak.
Story first published: Wednesday, March 25, 2020, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X