ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கும் நிலையில், சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

ஜாவா பெராக் பைக் மிக குறைவான பாபர் ஸ்டைல் பைக் மாடலாக வர இருக்கிறது. அதாவது, பின் இருக்கை, வால் பகுதி அமைப்பு இல்லாமல் வடிவமைக்கப்படும் இந்த பாபர் (Bobber) வகை பைக் மாடல்கள் மிகவும் தனித்துவமாக இருப்பதால், தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. விலை உயர்ந்த ரகத்தில் மாடல்கள் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் இந்த வகை பைக் மாடல்கள் இல்லை.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

இந்த நிலையில், இந்தியர்களுக்கு தனித்துவமான தேர்வை வழங்கும் விதத்தில், பாபர் வகையில் பெராக் என்ற பைக் மாடலை ஜாவா அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு, டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

ஆனால், இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. இதனால், பெராக் பைக்கின் டெலிவிரிப் பணிகள் தாமதமாகி வருகின்றன. இந்த சூழலில், கொரோனா பிரச்னையை ஓரம் கட்டிவிட்டு, இழப்புகளை சரி கட்டும் விதத்தில் புதிய மாடல்களை வாகன நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருவதுடன், டெலிவிரிப் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

இதனை மனதில் வைத்து பெராக் பைக்கை விரைவில் டெலிவிரி கொடுக்க ஜாவா ஆயத்தமாகி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட டீசர் மூலமாக வரும் 20ந் தேதி முதல் பெராக் பைக் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக செய்திகள் பரபரக்கின்றன.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

இந்த நிலையில், ஜாவா பெராக் பைக்கிற்கு சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் இல்லாமல், பெராக் பைக்கின் விலையில் 100 சதவீதம் கடன் பெறும் விதத்தில், இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

அதேபோன்று, மாதத் தவணைகளில் முதல் மூன்று தவணைகளுக்கான தொகையில் 50 சதவீதத்தை மட்டுமே செலுத்தும் வகையில் சிறப்பு மாதத் தவணை திட்டமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், மாதத் தவணையாக ரூ.6,666 செலுத்தும் திட்டமும் உள்ளது.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

மேலும், இரண்டு ஆண்டு மாதத் தவணை கொண்ட கடன் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.8,000 மாதத் தவணையையும், மூன்று ஆண்டுகள் கடன் திட்டத்திற்கு ரூ.6,000 மாதத் தவணையும் செலுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

ஜாவா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் பாபர் வகையில் தனித்துவமாகபெராக் பைக் வசீகரிக்கிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட், சிங்கிள் சீட் அமைப்பு, கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், இரட்டை புகைப்போக்கி, ஒற்றை டயல் அமைப்புடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஜாவா பெராக் பைக்கை டவுன்பேமண்ட் இல்லாமல் வாங்கலாம்... கவர்ச்சிகர கடன் திட்டம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa has announced attractive finance schemes and offers for its customers looking to purchase the bobber-style motorcycle. This includes 100 per cent financing with zero down payment depending on the eligibility of the customer.
Story first published: Friday, July 17, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X