ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது மூன்றாவது மோட்டார்சைக்கிள் மாடலாக கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தி இருந்த பாப்பர்-ஸ்டைல் பெராக் பைக் தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

ஜாவா பெராக் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.95 லட்சமாக உள்ளது. சந்தையில் அறிமுகமாகிவிட்டாலும் இந்த பைக்கின் டெலிவிரிகள் இன்னும் ஆரம்பவில்லை. முன்னதாக இந்த டெலிவிரி பணிகள் விரைவில் துவங்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

ஆனால் அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்ததால் இதன் டெலிவிரி தாமதமானது. இந்த நிலையில் தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் ஸ்பை வீடியோவை ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

ஜாவாவின் இந்த புதிய பைக் இன்னும் ஏஆர்ஏஐ அமைப்பிடம் இருந்து ஒத்திசைவிற்கான அனுமதியை வாங்கவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் முன்பதிவு செய்து பெராக் பைக்கிற்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

இருப்பினும் பெராக் பைக்கை ஜாவா டீலர்ஷிப்கள் காட்சிக்காக வைப்பதையும், அவற்றை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ட்ரைவ் கொடுப்பதையும் தவிர்க்கவில்லை. ப்ராண்ட்டின் தனித்துவமான பைக் மாடலாக விளங்கும் பெராக்கின் சிறப்பம்சமே அதன் பாப்பர் தோற்றம் தான்.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

இந்த பைக்கில் 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு, டிஒஎச்சி என்ஜினை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30 பிஎச்பி மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

சமீபத்தில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமான ஜாவா 300 மற்றும் 42 மாடல்களுடன் ஒப்பிடும்போது பெராக்கின் என்ஜின் 41சிசி பெரியதாகும். இதனால் 3 பிஎச்பி மற்றும் 3 என்எம் டார்க் திறன் கூடுதலான ஆற்றலுடன் இயங்கும் திறனையும் தற்போது சோதனையில் உட்படுத்துள்ள பைக் பெற்றுள்ளது.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

சஸ்பென்ஷிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கையும், பின்புறத்தில் 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் செட்அப்பையும் பெற்றுள்ள ஜாவா பெராக் பைக்கில் ப்ரேக்கிங் பணிக்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் 280மிமீ மற்றும் 240மிமீ அளவுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..?

இவற்றுடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக வழங்கப்பட்டுள்ளன. விலை அடிப்படையில் பார்க்கும்போது இந்திய சந்தையில் உள்ள கவர்ச்சிக்கரமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக விளங்கும் ஜாவா பெராக்கிற்கு விற்பனையில் எந்த பைக் மாடலும் தற்போதைக்கு போட்டியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Jawa Perak continues testing – ARAI homologation pending
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X