குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

ஜாவா பெராக் பைக்கிற்கு புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் மூலமாக ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ஜாவா பைக் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. முதலாவதாக ஜாவா 300, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளின் டெலிவிரிப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த சூழலில், பெராக் பைக்கின் டெலிவிரி தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

எனினும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் முதலாமாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பெராக் பைக்கின் விற்பனையை ஜாவா மீண்டும் உறுதி செய்தது. விலையும் மாற்றம் செய்யப்பட்டு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

பிஎஸ்6 விதிகள் அமலுக்கு வரும்போது ஏப்ரல் மாத வாக்கில் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னை ரூபத்தில் பெராக் பைக்கின் டெலிவிரிப் பணிகள் தள்ளிப்போய் வருகிறது.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இந்த நிலையில், தற்போது வீடியோ டீசர் ஒன்றை ஜாவா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில், ஜாவா வரலாற்று நிகழ்வுகள் தொகுப்பு இடம்பெற்றிப்பதுடன் இறுதியில் புதிய ஜாவா பெராக் பைக்கும் இடம்பெற்றுள்ளது. மேலும், பெட்ரோல் டேங்க் மூடியில் 7 என்ற எண்ணும், பக்கவாட்டில் சைடு கவரில் 20 என்ற எண்ணும் காட்டப்படுகிறது.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இதன்மூலமாக, இந்த பைக்கின் டெலிவிரிப் பணிகள் இந்த மாதம் முதல் துவங்க இருப்பதை ஜாவா நிறுவனம் சூசகமாக வாடிக்கையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் கட்டியம் கூறுவதாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மிக விரைவில் இந்த பைக் வாடிக்கையாளர்களிடம் தவழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

ஜாவா பெராக் பைக் மாடலானது பாபர் என்ற வகை ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பின்புறம் இருக்கை மற்றும் வால் பகுதி இல்லாமல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது வித்தியாசமான தோற்றத்தையும், தனித்துவத்தையும் கொண்டுள்ளது. இதனால், இந்த பைக்கை வாங்க பலர் காத்திருக்கின்றனர்.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

ஜாவா பெராக் பைக்கில் 334சிசி டிஓஎச்சி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஜாவா 300 பைக்குகளைவிட 3 பிஎச்பி கூடுதல் பவரையும், 3 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும்.

குட் நியூஸ்... ஜாவா பெராக் பைக் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய தொழில்நுட்பமாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Motorcycles has launched three motorcycles in the Indian market since the brand's revival back in 2018. The company's latest offering, the Perak is a bobber style motorcycle that was launched in November 2019.
Story first published: Thursday, July 16, 2020, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X