ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரோரிங் ரைடர்ஸ்/ ஜாவா பெராக் ஓனர்ஸ் & லவ்வர்ஸ் போன்ற ஃபேஸ்புக் க்ருப்களில் பதிவிடப்பட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

ஜாவா நிறுவனம் பெராக் மோட்டார்சைக்கிளை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் இந்த பைக்கிற்கான முன்பதிவுகளை துவங்கிய ஜாவா ப்ராண்ட் அப்போதே இந்த பைக்கின் டெலிவிரி பணிகள் துவங்கப்படவுள்ள நாளையும் அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸினால் திட்டமிட்டப்படி இந்த பைக் டெலிவிரியை துவங்கவில்லை.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

டெலிவிரி குறித்த அறிவிப்பு வெளியான சமயத்திலேயே பெராக் பைக்கின் திருத்தியமைக்கப்பட்ட என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் வெளியிடப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் வழக்கமான என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் அமைப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளன.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

ஆனால் இவற்றை தயாரிப்பு நிறுவனம் இலகுவான மற்றும் சிறப்பான ஆற்றல் வழங்கிற்காக திருத்தியமைத்துள்ளது. இதனால் புதிய பெராக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 334சிசி, டிஒஎச்சி என்ஜின் முன்பை விட 0.2 பிஎச்பி அதிகமாக 30.2 பிஎச்பி பவரையும், 1.74 என்எம் அதிகமாக 32.74 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

மேலும் இந்த பைக்கிற்கு அட்டகாசமான பொருளாதார திட்டங்களையும் ஜாவா நிறுவனம் இதன் அறிமுகத்தின்போது அறிவித்திருந்தது. இதன் மூலம் சில நெகிழ்வான திருப்பி செலுத்தும் திட்டங்களுடன் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பூஜ்ஜிய முன்பணம் செலுத்தும் வசதியை பெறலாம்.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

அதேநேரம் முதல் மூன்று மாதத்திற்கான மாத தவணையில் 50 சதவீதம் குறைப்பு அல்லது ரூ.6,666-ல் சிறப்பு மாத தவணை தேர்வுகளில் ஒன்றையும் தேர்வு செய்யலாம். இவற்றுடன் மாதம் ரூ.8,000-ல் இரண்டு வருட கடன் மற்றும் ரூ.6,000-ல் மூன்று வருட கடன் உள்ளிட்ட தேர்வுகளையும் பெற முடியும்.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

பெராக் பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், பைக்கில் முக்கிய சிறப்பம்சங்களாக நீட்டிக்கப்பட்ட ஸ்விங்கார்ம், ஒற்றை இருக்கை அமைப்பு, கண்ணீர்த்துளி வடிவிலான 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், இரட்டை எக்ஸாஸ்ட், தாழ்வாக பொருத்தப்பட்ட டெயில்லேம்ப்கள், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வந்தது இன்ப செய்தி...!

மிக நீண்ட காலமாக ஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே தங்களது பைக்கிற்காக காத்திருக்க வேண்டும். பைக் ரெட்ரோ டிசைனில் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் அளவுகளுடன் வெளிவந்துள்ளதால் இந்த காத்திருப்பு மதிப்புடையதே.

Most Read Articles

English summary
Jawa Perak Delivery Started
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X