பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்!

விலையுயர்ந்த சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் ஜீப் நிறுவனம், அதீத திறனுடைய பெடல் செய்யும் வசதிகொண்ட இ-பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பைக்கின் விலை புதிய பட்ஜெட் ஹேட்ச் பேக் கார்களுக்கு இணையான மதிப்பைக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

சொகுசு வாகனங்களை உற்பத்தி செய்து வரும் பிரபல ஜீப் நிறுவனம், முதல் முறையாக பெடல் வசதிக்கொண்ட மின்சார பைக்கை உற்பத்தி செய்து அறிமுகம் செய்துள்ளது. இதனை முன்னதாக 'கிரவுண்தோக் நாள்' என்ற நிகழ்விலேயே விளம்பரம் படுத்தும் விதமாக அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அன்று நடைபெற்றது.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

இதைத்தொடர்ந்து, இந்த பெடல் வைத்த இ-பைக்கிற்கான புக்கிங்கையும் அது தொடங்கியது. இந்த இ-பைக் இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது மேற்கத்திய நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றது.

இதற்கு விலையாக அமெரிக்க டாலர்களில் 5,899 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 4.30 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

ஆகையால், இந்த இ-பைக்கை ஆன் ரோடில் வாங்கினோமேயானால் ரூ. 5 லட்சத்தையும் கடந்து அதிக விலையை பெறும். அடேங்கப்பா, என்னது இது இந்த இ-சைக்கிளுக்கு இவ்ளே விலையா..? என நீங்கள் உறைந்து போகலாம். மேலும், இந்த அளவு தொகைக்கு நாம புதுசா ஹேட்ச்பேக் காரையே வங்கிடலாமே என்ற எண்ணமும் நம் மத்தியில் தோன்றலாம்.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

ஆனால், இந்த இ-பைக்கில் இருக்கும் அம்சத்தைக் கேட்டால் மீண்டும் வாயை பிளந்துவிடுவீர்கள். அந்தளவிற்கு பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பெடல் மின்சார பைக்காக இது இருக்கின்றது. ஆனால், அதுகுறித்த முழுமையான தகவலை ஜீப் வெளியிடவில்லை.

அமெரிக்காவின் கோலரடோவை மையமாகக் கொண்டு இயங்கும் குவெய்ட்கேட் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த இ-பைக்கை ஜீப் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

இந்த இ-பைக்கில் 750W மின்மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆஃப்ரோடுகளில் பயணிப்பதற்கு ஏதுவான 4.8 இன்ச் கொண்ட குண்டான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது, ஆஃப் ரோடுகள் மட்டுமின்றி ஆன் ரோடில் சிறப்பாக பயணிக்க உதவும்.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

இத்துடன், இந்த இ-பைக்கில் சொகுசான பயண அனுபவத்திற்காக ஃபயர்-லிங்க் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10-ஸ்பீடு டிரைவ் ட்ரெயின் சிஸ்டம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. மலையேற்றம் போன்ற கரடு, முரடான பாதை பயணத்தில் மிகுந்த பயனை வழங்கும்.

இதனை ஜீப் நிறுவனம் இரு விதமான அளவு தேர்வில் விற்பனைக்கு வழங்குகின்றது. உதாரணமாக, மீடியம் என்ற 17 இன்சிலும், லார்ஜ் என்கிற 19 இன்சிலும் இந்த இ-பைக்குகள் களமிறக்கப்பட்டுள்ளன.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

இதேபோன்று, அனைத்துவிதமான சாலைகளிலும் பயணிப்பதற்கு ஏதுவாக இ-பைக்கின் தோற்றம் ஏற்றத்தாழ்வு கொண்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மலைகளில் மட்டுமின்றி பனி நிறைந்த சாலையில் இந்த ஆல்-டெர்ரயின் இ-பைக் அசால்ட் செய்துவிடும்.

இதற்காக இன்வெர்டட் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முன்பக்கத்தில் அது 150 மிமீ, பின்பக்கத்தில் 120 மிமீ அது காணப்படுகின்றது.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

இதுபோன்ற பல்வேறு பிரிமியம் வசதிகளை இந்த இ-பைக் தன்னுள் உள்ளடக்கியிருப்பதால் இது இரண்டாம் வகுப்பு இ-பைக் என்ற புகழைச் சூடியிருக்கின்றது.

அதேசமயம், இது குறைந்த வேக மின்சார பைக்குகளுக்கு இணையான ஓடும் திறனைப் பெற்றிருக்கின்றது. அதாவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

மேலும், ஒரு முழுமையான சார்ஜில் 64 கிமீ தூரம் என்ற ரேஞ்சையும் ஜீப் இ-பைக் வழங்குகின்றது. இந்த பைக் நடப்பாண்டு ஜீன் மாதத்திற்குள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற தகவல் பரவிய வண்ணம் இருக்கின்றது.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

குறிப்பாக, இந்த இ-சைக்கிள்கள் எஃப்சிஏ நிறுவனத்தின்கீழ் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளன. இந்நிறுவனம், ஜீப்பின் பல்வேறு தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

பிரபல ஜீப் நிறுவனத்தின் உயர் திறனுடைய பெடல் இ-பைக் அறிமுகம்... இதன் விலைக்கு ஒரு காரையே வாங்கிடலாம்..!

ஆகையால், ஜீப் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஒன்று விரைவில் இந்திய சாலையை ஆளவிருப்பது உறுதியாகியுள்ளது. இது, சிபியு (முழுமையான பில்ட் யூனிட்) வாயிலாக கொண்டு வரப்பட இருக்கின்றது. எனவே, சற்றே விலையுயர்ந்த இ-பைக்காக இது இந்தியாவில் களமிறங்கும்போது தோற்றமளிக்கும். குறிப்பாக, இந்தியாவில் விற்பனையாகும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் விலைக்கு இணையான மதிப்பில் அது விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.

Car images are used representative purpose only

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep e-Bike Launched. Read In Tamil.
Story first published: Wednesday, March 4, 2020, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X