கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ், குறைவான மாசு உமிழ்வு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் நிறைவை தரும் பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கி இருக்கிறது கவாஸாகி நிறுவனம்.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

ஜப்பான் நாட்டை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் உலக அளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்திய பிரிமீயம் பைக் மார்க்கெட்டிலும் கவாஸாகி தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. கவாஸாகி பைக்குகள் தொழில்நுட்ப அளவிலும் வாடிக்கையாளர்களால் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

இந்தநிலையில், எதிர்கால சந்தையின் போக்கையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பைக்குளுக்கான ஹைப்ரிட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

கார்களில் வழங்கப்படுவது போன்று பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் துணையுடன் பைக்குகள் இயங்கும் வகையில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக கவாஸாகி தெரிவித்துள்ளது.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

கவாஸாகி உருவாக்கும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட பைக்குகள் மூன்று விதமான டிரைவ் மோடுகளை கொண்டதாக இருக்கும். இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின்படி, எஞ்சின், மின் மோட்டார் தனித்தனியாக இயங்கும் விதத்திலும், தேவைப்படும்போது இரண்டும் சேர்ந்து ஹைப்ரிட் மோடில் இயங்கும் வகையிலும் உருவாக்கப்படுகிறது.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

நெடுஞ்சாலை பயணங்களின்போது பெட்ரோல் எஞ்சினிலும், நகர்ப்புறத்தில் மின் மோட்டாரிலும் இயங்கும். அதிக செயல்திறன் தேவைப்படும்போது ஹைப்ரிட் மோடில் வைத்து இயக்க முடியும். ஹைப்ரிட் மோடில் வைத்து இயக்கும்போது சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை ஓட்டுபவர் பெற முடியும் என்பதுடன் மாசு உமிழ்வு கணிசமாக குறையும்.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

அடுத்ததாக கவாஸாகி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பைக் எஞ்சின் மற்றும் இசியூ யூனிட் இயக்கம் குறித்த தகவல்களை ஓட்டுபவர் எளிதாக பெற்று அதற்கு தக்கவாறு பைக்கை இயக்க முடியும்.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

அதேபோன்று, ஓட்டி முடித்த பின்னர், ஓட்டுதல் முறை மற்றும் ஓட்டுபவர் செய்யும் தவறுகளை கண்டறிந்து அதனை சரிசெய்து கொள்வதற்கான தரவுகளையும் முப்பரிமாண வரைகலை வீடியோ நுட்பம் முறையில் ஓட்டுபவர் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். இதனால், அடுத்த முறை தவறுகளை தவிர்த்து சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தையும், பைக்கின் ஆயுளை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்.

கார்களை போன்று பைக்குகளுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் கவாஸாகி!

இந்த இரண்டு திட்டங்கள் குறித்த தகவல்களை இரண்டு வீடியோக்கள் வாயிலாக கவாஸாகி வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் முறைப்படி துவங்கி இருப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பங்கள் கவாஸாகி பைக்குகளில் எதிர்பார்க்க முடியும்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Japanese premium bike maker, Kawasaki is developing hybrid powertrain and artificial intelligence for bikes.
Story first published: Friday, December 11, 2020, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X