Just In
- 6 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவர்ச்சிக்கரமான நான்கு புதிய நிறத்தேர்வுகளை பெற்ற 2021 கவாஸாகி நிஞ்சா 400...
கவாஸாகி நிறுவனம் 2021 நிஞ்சா 400 பைக்கிற்கு தாய்லாந்து நாட்டு சந்தையில் நான்கு புதிய நிறத்தேர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்த நான்கு புதிய நிறத்தேர்வுகளில் பளபளப்பான கருப்பு, க்ரே, பளபளப்பான நீலம், மற்றும் நிறுவனத்தின் சமீபத்திய கேஆர்டி எடிசன் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் புதிய பளபளப்பான கருப்பு நிறத்தேர்வில் பைக் மொத்தமும் கருப்பு நிறத்தில் வழங்கப்படும்.

அதேநேரம் பெட்ரோல் டேங்க் மற்றும் முன்பக்கத்தில் சில பகுதிகள் வெள்ளை நிறத்தை கொண்டிருக்கும். அதேபோல் இந்த நிறத்தேர்வில் பைக்கின் அலாய் சக்கரங்கள் சிவப்பு நிற பின்ஸ்டிரிப்பிங்கை கொண்டிருக்கும். மற்ற நிறத்தேர்வுகளை காட்டிலும் இந்த கருப்பு நிறத்தில் இந்த பைக் மாடல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த புதிய க்ரே நிறத்தேர்வை பார்த்தால், இதில் பைக் முழுவதும் பளபளப்பான க்ரே மற்றும் மேட் க்ரே என்ற கலவையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அடர் குறைவான பச்சை மற்றும் கிராஃபிக்ஸ் பைக்கிற்கு பிரகாசத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். இவற்றிற்கு மத்தியில் பெட்ரோல் டேங்கில் கருப்பு நிறத்தில் வழங்கப்படும் முத்திரை பைக்கிற்கு கம்பீரத்தை வழங்கும்.

‘கவாஸாகி' என்ற வார்த்தை வழக்கத்திற்கு மாறாக என்ஜினிற்கு அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நிறத்தேர்வான பளபளப்பான நீலத்தில் பைக் நீலம்-பச்சை கலவையில் காட்சியளிக்கிறது. நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ள இந்த கலவை எவ்வளவு கூட்டத்திற்கு நடுவில் நின்றாலும் பைக்கை தனியாக சுட்டி காட்டும்.

இதில் பைக்கின் கீழ்பகுதி கருப்பு நிறத்திலும், அலாய் சக்கரங்களில் பின்ஸ்ட்ரிப்பிங் வெள்ளை நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி கேஆர்டி எடிசனில் 2021 நிஞ்சா 400 பைக், வெள்ளை-சிவப்பு நிற கலவையில் இருக்கும். இந்த நிறத்தேர்வில் பைக்கின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிறத்தை முன்பகுதி, பக்கவாட்டு மற்றும் பின்பகுதியிலும் சில இடங்களிலும் பார்க்க முடிகிறது.

இந்த எடிசன் நிறத்தில் பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் வழங்கப்படும் ஸ்டிக்கரிங் திருத்தியமைக்கப்பட்டிருக்கும். மேலும் பின்புற கௌலையும் இந்த எடிசன் தேர்வில் சற்று கூடுதல் கருப்பு நிறத்தில் கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எடிசனில் நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கையும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

புதிய பெயிண்ட் அமைப்புகள் தவிர்த்து பைக்கில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்த புதிய நிறத்தேர்வுகளிலும் வழக்கமான என்ஜின் அமைப்பை தான் பைக் தொடரவுள்ளது. இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.4.99 லட்சத்தை விலையாக கொண்டுள்ள இந்த 400சிசி பைக்கிற்கு எபோனி ப்ளாக் மற்றும் லைம் க்ரீன் என்ற நிறத்தேர்வுகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.