ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

கவாஸாகி நிறுவனம் 2021 நிஞ்சா 250 பைக்கை ஜப்பானிய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

ஜப்பான் நாட்டு சந்தையில் இந்த 2020 டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்க பெறவுள்ள இந்த 250சிசி கவாஸாகி பைக்கின் விலை 6,54,500 யென் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4.62 லட்சம் ஆகும்.

ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

ஜப்பானில் இந்த பைக் மெட்டாலிக் கார்பன் க்ரே மற்றும் கேஆர்டி எடிசன் என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கும். இதில் மெட்டாலிக் கார்பன் க்ரே நிறத்தில் பைக்கை 6,43,500 யென்னில் (ரூ.4.57 லட்சம்) அங்குள்ளவர்கள் வாங்கலாம்.

ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

கவாஸாகி நிறுவனம் 2021 நிஞ்சா 250 பைக்கிற்கு பின் இருக்கை கௌல், பெரிய விண்ட்ஷீல்டு, டிசி பவர் சாக்கெட் மற்றும் ரேடியேட்டர் திரை என்ற கூடுதல் ஆகஸ்ஸரீ தேர்வுகளையும் வழங்கவுள்ளது. புதிய நிறம் மற்றும் கிராஃபிக்ஸ் தவிர்த்து 2021ஆம் ஆண்டிற்காக நிஞ்சா 250 பைக்கில் பெரிய அளவில் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை.

ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

இதனால் இரட்டை-பேட் எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மஸ்குலர் டிசைன், ஒருங்கிணைக்கப்பட்ட முன்பக்க பிளிங்கர்ஸ் மற்றும் பிளவுப்பட்ட வடிவில் இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றில் இந்த 2021 மாடலில் எந்த மாற்றமும் இல்லை.

ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

அதேபோல் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ-ஷாக் உள்ளிட்டவையும் அப்படியே தொடர்ந்துள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் மற்றும் பின்புறத்தில் 310மிமீ மற்றும் 220மிமீ-ல் பெடல்-வகை டிஸ்க்குகள் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250!!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் 248சிசி, இணையான-இரட்டை, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 12,500 ஆர்பிஎம்-ல் 36.2 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம்-ல் 23 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் உடன் செயல்படும்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Ninja 250 launched in Japan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X