கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 சூப்பர் பைக்குகளின் பிஎஸ்6 மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

கவாஸாகி நிறுவனத்தின் பிரபலமான சூப்பர் பைக் மாடல்கள் நின்ஜா 1000 மற்றும் இசட்900. இந்த இரண்டு பைக்குகளுக்கும் டிசைன் அடிப்படையில், வெவ்வேறு வகை வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கின்றன. இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றன.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த பைக்குகளின் பிஎஸ்6 மாடல்களின் டெலிவிரி தாமதமாகி உள்ளது. எனினும், அடுத்த ஓரிரு மாதங்களில் துவங்கப்பட உள்ளன.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

இதற்கு ஏதுவாக இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் இந்தியாவில் உள்ள கவாஸாகி டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளன. முன்பதிவு தொகையானது டீலருக்கு டீலர் மாறுபடும் என்று தெரியவந்துள்ளது.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

சில டீலர்களில் ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். சில டீலர்களில் ரூ.2.50 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கடன் திட்டத்தை தேர்வு செய்வோர், உரிய ஆவணங்களை கொடுத்து டவுன் பேமண்ட் செலுத்தும்பட்சத்தில், புக்கிங் உறுதி செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் டெலிவிரி கொடுக்கப்படும்.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ரூ.8.50 லட்சம் முதல் ரூ.9 லட்சம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், பிஎஸ்6 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிரிமீயம் பைக் மாடலாகவும் வந்தது. ஆனால், நின்ஜா 1000 பைக்கின் விலை விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

கவாஸாகி இசட்900 பைக்கில் இருக்கும் 4 சிலிண்டர் அமைப்புடைய 948 சிசி எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 98.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடலில் பல கூடுதல் சிறப்பம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

கவாஸாகி இசட்900 பைக்கில் ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், மோனோ ஷாக் அப்சார்பரும், டன்லப் ஸ்போர்ட்ஸ்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 250 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இந்த பைக் மெட்டாலிக் கிராஃபைட் க்ரே- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் - மெட்டாலிக் ஃப்ளாட் ஸ்பார்க் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

கவாஸாகி நின்ஜா 1000 மற்றும் இசட்900 பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

மறுபுறத்தில் கவாஸாகி நின்ஜா 1000 பைக்கின் பிஎஸ்6 மாடலானது இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலின் விலை 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கப்படும். தற்போது நின்ஜா 1000 பைக் இந்தியாவில் ரூ.10.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
The Kawasaki Ninja 1000 and the Z900 BS6 motorcycles are open to pre-booking at company's dealerships across the country. The Kawasaki Z900 motorcycle was the first premium motorcycle to achieve BS6 compliance when it was launched last year.
Story first published: Saturday, May 9, 2020, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X