கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

கவாஸாகி இந்தியா நிறுவனம் ஒரு வழியாக 2020 நிஞ்சா 650 மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரி பணிகளை இந்தியாவில் துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான கவாஸாகியின் புதிய மிடில்-வெய்ட் பைக் மாடலான 2020 நிஞ்சா 650 கடந்த மே மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

2020ஆம் ஆண்டிற்காக கவாஸாகி உருவாக்கியுள்ள இந்த பைக் ஏகப்பட்ட நுட்பமான மாற்றங்களை பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கூர்மையான மற்றும் கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் & டெயில்லேம்ப்ஸ், ப்ளூடூத் இணைப்புடன் 4.3 இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை உள்ளன.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

லைம் எபோனி க்ரீன் மற்றும் பேர்ல் ஃப்ளாட் ஸ்டார்டஸ்ட் வொய்ட் என்ற இரு விதமான நிறங்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 பைக்கில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமில்லாமல் கூடுதலான தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ள வழக்கமான 649சிசி இணையான-இரட்டை லிக்யூடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி பவரையும், 6700 ஆர்பிஎம்-ல் 65.7 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வெளிப்படுத்தும்.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

மற்றப்படி பைக்கின் பரிணாம அளவுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இதன் பிஎஸ்4 வெர்சனை போல் மொத்தம் 196 கிலோ எடை கொண்டதாக உள்ள 2020 பைக்கில் பெட்ரோல் டேங்கும் அதே 15 லிட்டர் கொள்ளளவில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

சஸ்பென்ஷிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் மோனோஷாக்கையும் கொண்டுள்ள நிஞ்சா 650 பைக்கில் ப்ரேக்கிங் பணிக்கு முன் சக்கரத்தில் இரட்டை டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் ஏபிஎஸ்-ம் உள்ளது.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

இந்தியாவில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கில் தற்போது தளர்வு கொண்டுவரப்பட்டு நிலையில் விற்பனை வாகனங்களுக்கான முன்பதிவுகளை ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப்ஸ் என இரு விதமான முறைகளில் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...

இதே பாணியில் தான் கவாஸாகி இந்தியா நிறுவனமும் இந்த 650சிசி பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்று கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளதால் தான் 2020 நிஞ்சா 650 பைக் ஆனது மற்ற பைக்குகளுக்கு போட்டியளிக்கும் வகையில் விலையினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Kawasaki Showroom, Bangalore

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2020 Kawasaki Ninja 650 deliveries commence in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X