அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... வீடியோ..!

இந்திய பொது சாலையில் நிஞ்சா கவாஸாகி பைக் மணிக்கு 299 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வதைப் போன்ற வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இத்தகைய வேகம் எதுமாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்ற கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக, அதிகப்படியான சாலைகள் குண்டும், குழியுமாக மற்றும் பேராபத்தை விளைவிக்கின்ற வளைவுகளைக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, வேகமாக வரும் வாகனங்களை கவிழ்ப்பதற்காகவே கொட்டப்பட்டிருப்பதைப் போன்று சாலையோர மண் என அனைத்து விஷயத்திலும் இந்திய சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானதாக காட்சியளிக்கின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இதனாலயே, இந்திய சாலைகள் அதிகம் ஆபத்தானது என்ற சூடப்படாத மகுடத்தை ஏந்தியிருக்கின்றது. இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் தங்களின் வீர தீர சாகசத்தை நிகழ்த்துவதை தவிர்க்க மறுக்கின்றனர்.

அந்தவகையில், கவாஸாகி நிஞ்சா பைக்கில் ஆபத்தை உணராமல் அதிவேகத்தில் இளைஞர் சென்ற வீடியோக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பார்ப்போரை குலைநடுங்க வைக்கும் அந்த காட்சியில், பைக் உச்சபட்சமாக மணிக்கு 299 கிமீ வேகத்தில் செல்வதை உறுதிப்படுத்துகின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட வேகத்தைவிட மிக அதிகம் ஆகும். இத்தகைய வேகம் இந்திய சாலையில் பேராபத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு சில மேற்கத்திய நாடுகளே குறிப்பிட்ட சாலைகளில் மட்டும்தான் இத்தகைய உச்சபட்ச வேகத்திற்கு அனுமதி வழங்குகின்றன.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இந்தியா போன்ற அதிக வளைவுகள் மற்றும் வாகன நெரிசல் கொண்ட நாட்டில் இது கடுமையான குற்றமாக கருதப்படுகின்றது.

இருப்பினும் அந்த வாகன ஓட்டி அவரின் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக்கின் வேகம் மற்றும் ஆக்சலேரன்ஸை பரிசோதிக்கும் விதமாக இந்த விபரீத பல பரீட்சையை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு இதுபோன்ற அளவுகடந்த வேகமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

விபரீதமான வீடியோ பதிவை 10ஆர் ஆன்ஸ்டெராய்ட் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது அந்த பைக்கை ஓட்டிச் சென்ற ரைடரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

அதில், பொது சாலையில் செல்லும் கவாஸாகி நிஞ்சா பைக் சில நிமிடங்களிலேயே மணிக்கு 299 கிமீ வேகத்தில் சீறிப் பாய்வதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் வேகம் ஆகும். இதனை வேக சோதனைக்காக அந்த செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், இதுபோன்ற சோதனைகளை பொதுவெளியில் செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இந்த வேகம் எந்த அளவிற்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரியுமா..?

வேக சோதனைக்காக செய்யப்பட்டிருக்கும் இந்த முயற்சி மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று. அதிலும், பொது சாலைகளில் இதுபோன்ற சோதனை முயற்சி தனக்கு மட்டுமின்றி பிற வாகன ஓட்டிகளுக்கும் எதிர்பாராத அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இதன்காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் பொது சாலைகளில் இதுபோன்ற வேக பரிசோதனையைச் செய்வதை இரும்பு கரம் கொண்டு தடுக்கின்றன. இருப்பினும், வாகன ஓட்டிகள் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும், இதுபோன்ற காரணிகளினாலயே இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

வீடியோவில் இயக்கப்படும் வேகத்தில் ஓர் சாதாரண நபர் மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் இயக்கினால், அவரால் அதனை கட்டுபடுத்தக்கூட முடியாமல் போகலாம். இது மிகவும் அசாத்தியமான பின்விளைவை ஏற்படுத்த வழிவகுக்கும். அதேசமயம், கை தேர்ந்த வாகன ஓட்டிகளுக்குகூட சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த வேகத்தில் அவ்வளவு எளிதில் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகையால், அளவுகடந்த வேகம் என்பது எப்போதுமே ஆபத்துதான்.

குறிப்பாக இந்திய சாலைகள் இதற்கு உகந்தவை அல்ல. இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக அதிகம் வளைவுகளைக் கொண்டவையாக இருக்கின்றன. இது, சாதாரண வேகத்தில்கூட பெரியளவிலான ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மிதமிஞ்சிய வேகம் யாரும் எதிர்பாராத பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். இதற்கு சிறிய பள்ளமே போதும். சவாரி செய்பவரை பைக்கிலிருந்து தூக்கி வீசி விடும்.

அதேசமயம், கவாஸாகி இசட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக்கைப் போல சில விலையுயர்ந்த வாகனங்களில் இதுபோன்ற சூழலில் பயணிக்கு பாதுகாப்பை வழங்குகின்ற வகையிலான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சூழ்நிலை எப்படி மாறும் என்பது யாரும் அறியாத ஒன்று. ஆகையால், வேகத்தை கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

பள்ளம் மேடுகள் நிறைந்த சாலைகளைப் போலவே பாதசாரிகள் மற்றும் விலங்குகளாலும் சில நேரங்களில் விபத்து நேர்கின்றன. இவர்கள் எப்போது சாலையில் தோன்றுவார்கள் என்றே கணிக்க முடியாது. இதற்கு முன்னதாக பாதசாரிகள் மற்றும் சாலையில் திடீரென தோன்றிய விலங்குகளால் பல்வேறு விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இதனால்தான் இந்தியாவின் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை எப்போதும் பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

ஆகையால், பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் சூழலை தவிர்க்க குறைந்த வேகத்தில், கவனமான சவாரியைச் செய்வதே சிறந்தது. அது நமக்கு நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். அதேசமயம், இதுபோன்ற அதிக வேகம் இந்தியாவில் சட்ட விரோதமானது என்பதால் போலீஸார் உங்கள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கலாம். ஆகையால், அதிகவேகம் எந்தவகையிலும் தீங்கு விளைவிப்பதாகவே காட்சியளிக்கின்றது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

கவாஸாகி நிறுவனத்தின் இந்த இசட்எக்ஸ் 10 ஆர்ஆர் பைக்கில் 998 சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்டு, 4 ஸ்டோக் இன் லைன் 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்மில் 197 பிஎச்பி பவரையும், 11,500 ஆர்பிஎம்மில் 113.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுது.

அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... இதெல்லாம் நல்லதுக்குதானா..?

இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இயங்குகின்றது. இதில் ரைடரின் பாதுகாப்பிற்காக கவாஸகி டிராக்ஸன் கண்ட்ரோல், க்விக் ஸிப்டர், எஞ்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், ஏபிஎஸ், கவாஸகி கார்னரிங் மேம்பாட்டு செயல்பாடு, எஞ்ஜின் பிரேக்கிங் செயல்பாடு ஆகியன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், பிரேக்கிங் இன்னர்ஷியல் மெஷரிங் யூனிட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kawasaki Ninja ZX 10RR Touches 299 KM Per Hour. Read In Tamil.
Story first published: Tuesday, January 28, 2020, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X