மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

கொரோனா வைரஸ், கவாஸாகி இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் அறிமுகத்தை தான் தள்ளி வைத்துள்ளதே தவிர்த்து அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய பைக்கின் மீதான வாடிக்கையாளர்கள் ஆர்வத்தை தூண்டும் பணிகள் அனைத்தும் எந்தவொரு தடையும் இன்றி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

இந்த வகையில் இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் தோற்றத்தை காட்டும் விதமாக புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆற்றல்மிக்க, இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் உடன் பைக்கின் உறுமல் சத்தம் அட்டகாசமாக காட்டப்பட்டுள்ளது.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

இருப்பினும் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் எதுவும் இதுவரை கவாஸாகி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த புதிய பைக் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 250சிசி, லிக்யூடு-கூலிங், டிஒஎச்சி, 16-வால்வுகள் என்ஜின் 17,000 ஆர்பிஎம்-ல் 45 பிஎச்பி பவரை வெளிப்படுத்தவல்லது.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

இந்த என்ஜின் உடன் விரைவான ஷிப்டரும் உள்ளது. ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக், கவாஸாகி நிஞ்சா 400 மற்றும் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்குகளின் பரிணாம வளர்ச்சியாக காட்சியளிக்கிறது.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

கூர்மையான மற்றும் முரட்டுத்தனமான இதன் ட்வின்-பேட் ஹெட்லேம்ப்களுடன், ஒருங்கிணைப்பட்ட பக்கவாட்டு டர்ன் சிக்னல்கள், நீட்டிக்கப்பட்ட டெயில் லைட், சிறிய அளவிலான 4x1 எக்ஸாஸ்ட் உள்ளிட்டவற்றை இந்த 250சிசி பைக் பெற்றுள்ளது.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

பாதுகாப்பிற்கு க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புற யுஎஸ்டி ஃபோர்க்குகள், இரட்டை முன்புற டிஸ்க் மற்றும் அனலாக் டாக்கோமீட்டர் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கியர் பொஷிசன் இண்டிகேட்டர் போன்ற வசதிகள் உள்ளன. கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் பைக் இந்தோனிஷியாவில் இந்த மாத துவக்கத்தில் அறிமுகமாக இருந்தது.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததால் இதன் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டது. கவாஸாகி நிறுவனம், நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் பைக்கிற்காக மிக பெரிய திட்டங்களை வைத்துள்ளது. இதன்படி, இந்நிறுவனத்தால் ஒன்-மேக் ரேஸிங் சாம்பியன்ஷிப் என்ற மோட்டார்சைக்கிள் போட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஜப்பானில் நடத்தப்படவுள்ளது.

மிரட்டலான சைலன்ஸர் சத்தத்துடன் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்... இந்த வீடியோவை பாருங்க தெரியும்...!

இந்த போட்டியில் அனுபவ மிக்க ரேஸர்கள் உடன் ஆரம்ப கட்ட நிலையில் உள்ள ரேஸர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போட்டியில் ஈடுப்படுத்தப்படவுள்ள நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் ரேஸ் வெர்சனையும் கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja ZX-25R hits the dyno [Video]
Story first published: Monday, April 20, 2020, 22:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X