கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் அறிமுகத்தை கவாஸாகி நிறுவனம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் குவார்ட்டர்-லிட்டர் ஸ்போர்ட் பைக்கான இசட்எக்ஸ்-25ஆர் பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

கவாஸாகி நிறுவனம் இந்த ஸ்போர்ட் பைக்கை வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி இந்தோனிஷியாவில் நடைபெற இருந்த கவாஸாகி பைக் வாரத்தில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் பெரும்பான்மையான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளன.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

இதனால் பைக் கண்காட்சி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கை இந்தோனிஷிய மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜப்பானை சேர்ந்த கவாஸாகிக்கு மிக பெரிய சறுக்கல் என்று தான் சொல்ல வேண்டும்.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

கடந்த ஆண்டு ஜெனிவாலில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்து இந்த இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் வீடியோ ஒன்று சில வாரங்களுக்கு முன்பு தான் கவாஸாகி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் நிஞ்சா 400 மாடலுடன் ஒத்த டிசைனை இந்த பைக் பெற்றுள்ளது தெரிய வந்தது.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

மேலும் இந்த வீடியோ, பார்ட்-அனலாக், 17,000 ஆர்பிஎம்-ல் சென்றால் சிவப்பாக மாறும் மினி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றையும் பைக் கொண்டுள்ளதை காட்டியிருந்தது. இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள சிறிய அளவிலான 249சிசி, இன்-லைன்-4 என்ஜின் 17,000 ஆர்பிஎம் வரையில் செயல்படக்கூடியது.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

இந்த என்ஜின் 40-50 பிஎச்பி வரையில் ஆற்றலை வெளிப்படுத்தும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேடிஎம் ட்யூக்390 பைக்கின் சிங்கிள்-சிலிண்டர் 43 பிஎச்பி பவரை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. கவாஸாகி இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் அதிகப்பட்ச வேகம் 160 kmph ஆகும்.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

என்ஜின் தவிர்த்து ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், விரைவான ஷிஃப்டர் மற்றும் பவர் மோட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த 250சிசி பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் ஷோவா எஸ்எஃப்எஃப்-பிபி ஃபோர்க்கும், கவாஸாகியின் பேக்-லிங்க் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி பைக்கின் அறிமுகம்...

இவ்வாறு அசத்தலான என்ஜின் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளை பெற்றுள்ள கவாஸாகி இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது எதிர்பார்த்த ஒன்று தான். கவாஸாகியை தொடர்ந்து ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்கு சந்தைக்கு வரவிருந்த புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுகங்களும் எந்தவொரு அறிவிப்புமின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki ZX-25R Global Launch Delayed Due To Covid-19 Pandemic
Story first published: Tuesday, March 31, 2020, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X