இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

ரூ.1.30 லட்சம் பட்ஜெட்டில் விலையில் புதிய பைக்கை இந்தியாவில் களமிறக்க கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை கவாஸாகி நிறுவனமும் குறிவைத்து வர்த்தகத்தை செய்ய இருப்பதாக தெரிகிறது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் கவாஸாகி பிரிமீயம் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகத்தை வலுவாக கொண்டு செல்லும் வகையில், மிக குறைவான பட்ஜெட்டில் புதிய பைக் மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கவாஸாகி நிறுவனம் W175 என்ற மோட்டார்சைக்கிளை விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலை அடுத்த அடுத்த துவக்கத்தில் இந்தியாவிலும் கொண்டு வர கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி கூறுகிறது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

பாரம்பரிய அம்சங்கள் கொண்ட 'ரெட்ரோ க்ளாசிக்' ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் மாடல் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடலை நேரடியாக குறிவைத்து களமிறக்கினால் அது எடுபடாது என்று கவாஸாகி கருதுகிறது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

எனவே, அதைவிட குறைவான விலையில், குறைவான செயல்திறன் கொண்ட இந்த W175 மாடலை களமிறக்க கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

இந்த பைக் பழமையான பைக் மாடல்களின் வடிவமைப்பு மற்றும் உதிரிபாகங்களை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, ஸ்போக்ஸ் சக்கரங்கள், ட்யூப் டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

இந்த பைக் டபுள் கிராடில் ஃப்ரேம் அமைப்பில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. பழைய பைக் மாடல்களை போலவே, இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

அதேநேரத்தில், தொழில்நுட்பத்தில் இக்கால மாடல்களுக்கு இணையான அம்சங்களும் உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்தியாவில் கட்டாயம் என்பதால், அதுவும் இடம்பெறும்.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

புதிய கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் 177சிசி ஏர்கூல்டு கார்புரேட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13 எச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்தியாவில் பிஎஸ்6 தரத்திற்கு தக்கவாறு கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வரும் என்று தெரிகிறது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

இந்த பைக்கின் 90 சதவீத பாகங்களை இந்தியாவிலேயே பெறுவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த பைக் மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இப்போது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350, ஜாவா 300, பெனெல்லி இம்பீரியல் 400, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆகிய பைக் மாடல்களின் விலை ரூ.1.50 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி?

இந்த சூழலில், கவாஸாகி டபிள்யூ175 பைக் மாடலானது ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் இடையிலான விலையில் வரும் வாய்ப்புள்ளது. இந்த விலையில் கொண்டு வரப்பட்டால், அது பட்ஜெட் அடிப்படையிலும், பிராண்டு மதிப்பு அடிப்படையிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
According to report, Kawasaki is planning to launch W177 motorcycle In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X