கவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...

2021ஆம் ஆண்டிற்கான 6 புதிய மாடல்களை கவாஸாகி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் உள்ளிட்டவை அடங்கும் அந்த 6 புதிய கவாஸாகி பைக்குகளை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

கவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...

உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனமாக உள்ள கவாஸாகியின் இந்த ஒரு புதிய 6 பைக்குகளும் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. இதற்கிடையில் தற்போது இந்த புதிய அறிமுகங்கள் டீசர் வீடியோ ஒன்றில் உறை மறைப்புகளுடன் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த ஆறு உறைக்குள் நகர்புறக்களில் இருந்து ஆஃப்-ரோடு வரை என அனைத்து விதமான சாலைக்கும் ஏற்ற கவாஸாகி நாயகன்கள் உள்ளனர். மூடியுள்ள உறைகளை வைத்து கண்டிப்பிடித்துவிடலாம் என்று பார்த்தால், ஒரே உறை டிசைன் தான் அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது, ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

கவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...

இதனால் இந்த பைக்குகளை பற்றி அறிந்து கொள்ள நவம்பர் 23ஆம் தேதி வரை காத்திருந்தே ஆக வேண்டாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோ வயர் ஸ்போக் சக்கரங்கள் மற்றும் க்னாபி டயர்களை கொண்ட ட்யூல் ஸ்போர்ட் பைக்கிற்கான டீசர் வீடியோ போல் உள்ளது.

கவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...

இந்த வீடியோவில் ரேஸ் ட்ராக்கில் இயங்கும் பைக்குகளின் டயர் குறியீட்டை வைத்து பார்த்தால் அவற்றுள் ஏதேனும் ஒன்று சூப்பர்மோட்டோ மாடலாக இருக்கலாம். கடைசி இரு பைக்குகளின் டயர்கள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் ரேஸ் ட்ராக்கில் இருந்தன.

கவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...

அதேபோல் இவற்றில் ஸ்போர்ட் டூரிங் பைக்கும் இருக்க வாய்ப்புள்ளது. கடைசியாக காட்டப்படும் பைக் வித்தியாசமான சாலையில் தேசிய நெடுஞ்சாலை போன்றவற்றில் இயக்குவதற்கு ஏற்றதாக காட்டப்பட்டுள்ளது.

கவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...

இதனால் இது அட்வென்ஜெர் மாடலாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏன், வெர்சஸ்-எக்ஸ் 650 அல்லது வெர்சஸ்-எக்ஸ் 1000 பைக்குகளின் அப்டேட் வெர்சனாக கூட இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும் இவற்றை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள நவம்பர் 23 வரை காத்திருந்தே ஆக வேண்டும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Teases Six New Models For 2021
Story first published: Saturday, October 3, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X