2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக் உலகளவில் பிரபலமான கவாஸாகி பைக் மாடல்களுள் ஒன்று. இத்தகைய ஸ்போர்ட்பைக் 2021ஆம் ஆண்டிற்காக தோற்றம், மெக்கானிக்கல் மற்றும் எலக்ரானிக்கல் பாகங்களில் சில மாற்றங்களை ஏற்றுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

மொத்தமாக மாசில்லா உமிழ்வு உடன் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் 2021 நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கில் அப்கிரேட்களை கவாஸாகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இயக்கத்தின்போது எதிர் காற்றினால் ஏற்படும் தடையை குறைக்கும் விதத்தில் இந்த பைக்கை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ள கவாஸாகி நிறுவனம் பைக்கின் தரைநோக்கிய விசையையும் அதிகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கில் பொருத்தப்படும் வழக்கமான 998சிசி இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் ஆனது ரீடிசைனிலான இன்டேக் போர்ட்ஸ் & வால்வு ட்ரெயின், டைமண்ட்-போன்ற கோட்டிங் உடன் ஃபிங்கர்-ஃபாலோவர்ஸ், டைட்டானியம் இன்டேக் & எக்ஸாஸ்ட் வால்வுகள் மற்றும் உலர் படல ஆயில் உடன் பிஸ்டன் ஸ்க்ரிட்ஸ் உள்ளிட்டவற்றுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

அதேபோல் பைக்கின் என்ஜின் அமைப்பில் புதியதாக காற்று-குளிர்விப்பான் சிஸ்டமாக கொண்டுவரப்பட்டுள்ள ஆயில் கூலர் என்ஜினை சுதந்திரமாக செயல்படவிடும். கவாஸாகியின் இந்த புதிய நிஞ்சா பைக்கின் சேசிஸும் வளைவுகளில் கூடுதல் செயல்திறனிற்காகவும், இலகுவான ஹேண்ட்லிங்கிற்காகவும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

2021 நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் ஸ்போர்ட்பைக்கில் கவாஸாகி கார்னரிங் நிர்வாக செயல்பாடு, போஸ்ச் ஐஎம்யு, ஸ்போர்ட்-கவாஸாகி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கவாஸாகி லாஞ்ச் கண்ட்ரோல் மோட், கவாஸாகி இண்டெலிஜண்ட் ஆண்டி-லாக் ப்ரேக் சிஸ்டம் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் தொழிற்நுட்பங்கள் ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

பைக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட ரைடிங் மோட்கள் மற்றும் எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோலும் வழங்கப்பட்டுள்ளன. கவாஸாகியின் மற்ற 2021 மாடல்களை போன்று நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கும் முற்றிலும் புதிய 4.3 இன்ச் முழு-டிஜிட்டல் டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்டேஷனை ஸ்மார்ட்போன் இணைப்புடன் பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

அமெரிக்க சந்தையில் இந்த 2021 கவாஸாகி பைக் ஏபிஎஸ்-இல்லா மற்றும் ஏபிஎஸ் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. அங்கு 16,399 அமெரிக்க டாலர்கள் (ரூ.12.17 லட்சம்) என்ற ஆரம்ப விலையுடன் இந்த பைக் விற்பனையை துவங்கவுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

இந்தியாவில் சில்லறை முறையில் விற்பனை செய்யப்பட்ட இதே நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆரின் அப்டேட் செய்யப்படாத வெர்சனின் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது நினைவுக்கூரத்தக்கது. இந்திய சந்தைக்கு 2021 நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக் விற்பனைக்கு வருமா என்பது குறித்த எந்த தகவலையும் கவாஸாகி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Ninja ZX 10 R Unveiled
Story first published: Wednesday, November 25, 2020, 1:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X