பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட கவாஸாகி இசட்650 பைக்கை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பைக்தேக்கோ செய்தி தளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

சரியாக இரு மாதங்களுக்கு முன்னர் இந்திய சந்தையில் அறிமுகமான இந்த 650சிசி கவாஸாகி பைக்கின் விலை ரூ.5,94,000 ஆக எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் சுமார் 25,000 ரூபாய் அதிகமாகும்.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

சுகோமி ஸ்டைலிங் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக் எல்இடி தரத்தில் ஹெட்லைட் மற்றும் 4.3 இன்ச்சில் வண்ண-டிஎஃப்டி திரையினை கொண்டுள்ளது. 2020 இசட்650 பைக்கினை வாங்க விரும்புவோர் கவாஸாகியின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பைக்கினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

அல்லது நேரடியாக டீலர்ஷிப் ஷோரூம் சென்றும் பைக்கை முன்பதிவு செய்யலாம். இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்தில் வழக்கமான 649சிசி இணையான-இரட்டை என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த என்ஜின் வழக்கம்போல் அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி பவரை தான் வழங்க இருந்தாலும், டார்க் திறன் 1.7 என்எம் அதிகரித்து 6700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் ஆக உள்ளது.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

பைக்கில் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் தொடர்ந்துள்ளது. ஆனால் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்படவில்லை. பைக்கில் மற்றொரு மாற்றமாக பழைய ஸ்போர்ட்மேக்ஸ் டி214எஸ் டயர்களுக்கு பதிலாக க்ரிப்பர் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 3 டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

மற்ற ஹார்ட்வேர் பாகங்களாக முன்புறத்தில் தலைக்கீழான ஃபோர்க் & 300மிமீ இரட்டை பெடல் டிஸ்க்கும், பின்புறத்தில் மோனோஷாக் & சிங்கிள் பெடல் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் மொத்த எடை முன்பை காட்டிலும் 1 கிலோ அதிகரித்துள்ளது.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

15 லிட்டரில் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள இந்த கவாஸாகி பைக்கின் உயரம் 790மிமீ-லும், கிரவுண்ட் கிளியரென்ஸ் 130மிமீ-லும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை அடிப்படையில் பிஎஸ்6 கவாஸாகி இசட்650 பைக்கிற்கு புதிய தலைமுறை பெனெல்லி டிஎன்டி 600 மற்றும் சிஎஃப்மோட்டோ 650என்கே உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

பளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பிஎஸ்6 பைக் இந்தியாவில் தற்போதைக்கு மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் என்ற ஒற்றை நிறத்தில் மட்டும் தான் விற்பனை செய்யப்படுகிறது. டீலர்ஷிப்களுக்கு இந்த பைக் வந்தடைய துவங்கிவிட்டதால் இதன் டெலிவிரி பணிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Z 650 BS6 Starts Reaching Dealership
Story first published: Thursday, August 6, 2020, 1:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X