கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

கவாஸாகி நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடலாக இசட்900 மாடல் பைக் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் நிஞ்சா 300 மாடலின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அதன் இடத்தை தற்போது இசட்900 பைக் பிடித்துள்ளது.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

நிஞ்சா 300 பைக்கின் விற்பனை சந்தையில் பெரிய அளவில் நடைபெற்றதற்கு, கவாஸாகி நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்து சந்தைப்படுத்தியது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த பைக்கை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்ய கவாஸாகி முன்வரவில்லை.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

இதனால் இந்த பைக் சில டீலர்ஷிப்களில் மார்ச் 31ஆம் தேதி வரை பிஎஸ்4 தரத்தில் கிடைக்கும். இசட்900 பைக் கவாஸாகியின் சிறந்த விற்பனை மோட்டார்சைக்கிள் என்ற பெயரை 71 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கையுடன் பெற்றுள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 39 இசட்900 பைக்குகள் மட்டுமே சந்தையில் விற்பனையாகி இருந்தது.

இதன்மூலம் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 82 சதவீதம் விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனுடன் கவாஸாகி இந்தியா நிறுவனம் 20 இசட்650 பைக்குகளையும், 18 நிஞ்சா 650 பைக்குகளையும், 12 வுல்கான் எஸ் பைக் மாடல்களையும் மற்றும் 13 இசட்எக்ஸ்-10ஆர்ஆர் பைக்குகளையும் இந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

மற்ற நிஞ்சா 300, இசட்எக்ஸ்-6ஆர், வெர்ஸஸ் 300எக்ஸ், வெர்ஸஸ் 1000 மற்றும் நிஞ்சா எச்2 பைக்குகள் தலா 1 யூனிட் விற்பனையாகியுள்ளன. இசட்900 மாடலின் பிஎஸ்4 வெர்சனின் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டதும், இதன் புதிய பிஎஸ்6 வெர்சன் ரூ.7.70 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றிருப்பதும் இசட்900 பைக்கின் இத்தகைய விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

கவாஸாகி எச்2 மாடலுடன் ஒத்த எல்இடி ஹெட்லைட்களை கொண்டுள்ள இசட்900 பிஎஸ்6 பைக்கில் பின்புற பகுதி முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இசட்900-ன் புதிய பிஎஸ்6 மாடலில் கூடுதலாக சில ரைடிங் மோட்கள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன

இந்த வகையில் சாலை, மழை, ஸ்போர்ட் மற்றும் ரைடர் என்ற நான்கு விதமான ரைடிங் மோட்களில் சந்தைக்கு வந்துள்ள 2020 கவாஸாகி இசட்900 பைக்கின் ஒவ்வொரு ரைடிங் மோடும் வேறுபட்ட பவர் மேப் மற்றும் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்புகளை பெற்றுள்ளன.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

இதில் ரைடர் மோடில் மோட்டார்சைக்கிளின் அமைப்புகளை ரைடர் தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து கொள்ள முடியும். மேலும் இந்த ரைடிங் மோட்களை பைக் இயக்கத்தில் இருக்கும்போதும் மாற்றி கொள்ள இயலும்.

புதிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்புகள் மூன்று மோட்களை கொண்டுள்ளன. இதில் முதல் மோட் வறண்ட பாலைவன சாலைகளுக்கும் ஸ்போர்ட்ஸ் ரைடிங்கிற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். இரண்டாவது மோட், ஸ்போர்ட்டியான பயணத்தையும், சிறந்த நிலைத்தன்மையையும் வழங்கக்கூடியது.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

மூன்றாவது மோட் ஈரமான சாலைகளில் பைக்கிற்கு கூடுதல் க்ரிப்-ஐ தரவல்லது. இவற்றுடன் என்ஜினை ஆற்றலையும் ஓட்டுனர் தனது விருப்பத்திற்கு ஏற்ப 123 பிஎச்பி மற்றும் 67 பிஎச்பி என இரு விதமான அளவுகளில் பெற முடியும். இதில் 67 பிஎச்பி பவர் மோட், மழை காலங்களில் பைக்கை இயக்க சரியான தேர்வாக இருக்கும்.

2020 இசட்900 பைக்கில் பிஎஸ்6-க்கு இணக்கமான 948சிசி டிஒஎச்சி, 16 வால்வு, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜினை கவாஸாகி நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 123 பிஎச்பி பவரையும் 98.6 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கக்கூடிய இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குவியும் வரவேற்பு... இதுதான் இப்போதைக்கு டாப்...

இந்த பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் 41மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸும், பின்புறத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை 300மிமீ டிஸ்க் முன்சக்கரத்திலும் 250மிமீ டிஸ்க் பின் சக்கரத்திலும் கவனிக்கின்றன. இவற்றுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Z900 Becomes Brand’s Best-Selling Motorcycle In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X