கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

கவாஸாகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர் விபரமும், சில சோதனை ஓட்ட வீடியோக்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

பிரிமீயம் பைக் தயாரிப்பில் ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்தியாவிலும் பல்வேறு வகையான பிரிமீயம் பைக் மாடல்களை கவாஸாகி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், எதிர்கால சந்தையை கருத்தில்கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார சூப்பர் பைக் மாடலை உருவாக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் புரோட்டோடைப் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் சோதனை களத்தில் ஆய்வு செய்யப்படும் வீடியோக்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

கவாஸாகி நிறுவனத்தின் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கு எண்டெவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் ஃபேரிங் பேனல்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வர இருப்பது வீடியோக்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

கவாஸாகி நின்ஜா மாடல்களை தழுவிய கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. நின்ஜா 650 மாடலை ஒப்பிடும் பல சிறப்பம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

சேஸீ, சஸ்பென்ஷன் போன்றவை கூட கவாஸாகி நிறுவனத்தின் நடுத்தர எடை வகையை சேர்ந்த பைக்குகளுக்கு இணையாக தெரிகிறது. இந்த பைக்கின் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

கவாஸாகி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டத் தகவல்களின்படி, தங்களது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என தெரிவித்திருந்தது.

கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

ஆனால், இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு சிறப்பான ரேஞ்ச் கொண்டதாக இருக்காது. எனவே, தயாரிப்பு நிலை மாடலில் கொடுக்கப்படும் பேட்டரி அதிக பயண தூரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக மின்சார வாகனங்களில் சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பைக்கில் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

இந்த பைக்கின் மின்சார மோட்டார் அதிகபட்சமாக 27 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக விரைவாக பேட்டரியை சார்ஜ் ஏற்றும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகி எண்டெவர் எலெக்ட்ரிக் பைக் மாடலானது பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்படும். அடுத்த ஆண்டு இந்த பைக் சந்தைக்கு கொண்டு வருவதற்கான முனைப்புடன் தற்போது சோதனை ஓட்டப் பணிகள் நடந்து வருவதாக கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has revealed the official name of its first electric bike and also released series of vidoes with further details.
Story first published: Wednesday, April 22, 2020, 17:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X