Just In
- 7 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பல லட்சம் மதிப்புள்ள ஹோண்டா கோல்டு விங்... இந்த பைக்கை இவர் எப்படி வாங்கினார் தெரியுமா?
யுட்யூப் சேனலை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் பல லட்சம் மதிப்புள்ள ஹோண்டா கோல்டு விங்கை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு யுட்யூப்தான் காரணம் என்ற ஆச்சரியமிக்க தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலக புகழ்பெற்ற பிரபல ஹோண்டா நிறுவனத்தின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்று ஹோண்டா கோல்ட்விங். இந்த பைக்கை இந்தியாவில் பார்ப்பது மிக மிக அரிது. இதற்கு, பைக்கின் உச்சபட்ச விலை மட்டுமே காரணம் ஆகும். ஆம், உயர் ரக கார்களுக்கு இணையான விலையில் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எனவேதான், பலருக்கு இந்த இருசக்கர வாகனம் எட்டாக் கனியாக இருக்கின்றது.

ஆனால், இந்த விலையுயர்ந்த பைக்கை இளைஞர் ஒருவர் யுட்யூப் சேனல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வாங்கியிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மல்லு டிராவல்லர்ஸ் எனும் முகப்புத்தக பக்கம் வெளியிட்ட தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

யு-ட்யூபர் தற்போது வாங்கியிருப்பதாக கூறப்படும் ஹோண்டா கோல்ட் விங் பைக் செகண்ட் ஹேண்ட் வாகனமாகும். ஆம், இதனை நீண்ட காலமாக வாங்கியே ஆக வேண்டும் நினைத்து வந்த இளைஞருக்கு தற்போதே அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பைக்கை ஒடிசா மாநிலவாசி ஒருவரிடம் இருந்தே யுட்யூப் இளைஞர் வாங்கியிருக்கின்றார். ஆனால், இவர் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போதும் கேரள மாநிலத்திலேயே இவர் வசித்து வருகின்றார்.

இந்த பைக்கை வாங்குவதற்காக யுட்யூபர் எத்தனை லட்சங்களை வாரி இறைத்தார் (செலவழித்தார்) என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவலை அவர் யாரிடமும் கூறவுமில்லை. ஆனால், இந்த பைக்கின் புதிய மாடலுடைய விலை ரூ. 28.5 லட்சங்கள் ஆகும். கார்களுக்கு இணையான வசதி மற்றும் அதி நவீன தொழில்நுட்பங்கள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்ற காரணத்தினானலயே இத்தகைய உச்சபட்ச விலை இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விலையுயர்ந்த ஹோண்டா கோல்டு விங் பைக்கையே யுட்யூபர் செகண்ட் ஹேண்டில் வாங்கியிருக்கின்றார். இதுகுறித்து இளைஞர் ஒருவர் கூறுகையில், இந்த பைக் தற்போது வரை 14, ஆயிரம் கிமீட்டர்கள் மட்டுமே பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இது மிக அதிகம் கிடையாது. இன்னும் பல ஆயிரம், ஏன் லட்சக் கணக்கான கிமீ வரை இந்த பைக் நல்ல உறுதி தன்மையுடன் பயணிக்கும் திறன் கொண்டது.

ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில் மிகப்பெரிய எஞ்ஜினைப் பயன்படுத்துகின்றது. அதாவது, 1,832 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, 6 சிலிண்டர் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்மில் 118 பிஎஸ் பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 167 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸின் மூலம் இயங்குகின்றது.

ஹோண்டா கேல்ட்விங் பைக்கில் இருக்கும் எஞ்ஜின் மட்டுமில்லைங் அதனுடைய உருவமும் மிகப்பெரியது. எனவேதான், காருக்கு இணையான சொகுசு மற்றும் சிறப்பு வசதியை அதன் ரைடருக்கு அப்-பைக் வழங்குகின்றது. குறிப்பாக, சொகுசான இருக்கைகள் நீண்ட நேரம் பயணித்தாலும் சிறு துளி சோர்வைக் கூட வழங்காத வகையில் இருக்கின்றது. அதாவது லக்சூரி கார்களில் செல்வதைப் போன்ற அனுபவத்தை வழங்கும்.

அதேசமயம், இந்த பைக்கின் மிகப்பெரிய உருவம் சற்றும் அதன் வேகத்திற்கோ, ரைடருக்கோ இடையூறானதாக அமைந்துவிடாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காற்றில் எதிர்வினையாற்றும் வகையில் கூர்மையான உருவ அமைப்புகள் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது, காற்றை கிழித்துச் செல்ல உதவும்.

இதுதவிர, தொழில்நுட்ப வசதிகளாக மிகப்பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாட்டர் ப்ரூஃப் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள், ஏர் பேக் (பாதுகாப்பிற்காக), எலெக்ட்ரிக் ரிவர்ஸ் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. கார்களில் மட்டுமே வழங்கப்படும் ஏர் பேக் வசதி இதில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

இத்தகைய அதிநவீன சிறப்பு வசதிகளைக் கொண்ட ஹோண்டா கோல்டு விங் பைக்கையே நீண்ட காலமாக காத்திருந்து தற்போது செகண்ட் ஹேண்டில் யுட்யூபர் பெற்றிருக்கின்றார். இந்த பைக் இந்தியாவில் தற்போது ஏர் பேக் மற்றும் ஏர் பேக் இல்லாதது என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், ரூ. 28.5 லட்சம் முதல் ரூ. 31.5 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.