கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

கேடிஎம் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 250 அட்வென்ஜெர் பைக்கின் வீடியோ ஷோரூம் டீலர்கள் மூலம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

ஆரம்ப நிலை அட்வென்ஜெர் பைக்கை களமிறக்க கேடிஎம் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தின் புதிய அட்வென்ஜெர் ரக பைக்காக 250 அட்வென்ஜெர் இந்த அக்டோபர் மாத இறுதியில் அறிமுகமாகவுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

இந்த நிலையில் டீலர்ஷிப்களுக்கு இந்த மோட்டார்சைக்கிளை அனுப்பி வைக்கும் பணியினை கேடிஎம் இந்தியா நிறுவனம் ஆரம்பித்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் 250 அட்வென்ஜெர் பைக்கை இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் அறிமுகப்படுத்தவே இந்நிறுவனம் திட்டமிட்டது.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

ஆனால் கொரோனாவினால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது ஒருவழியாக கேடிஎம் நிறுவனம் அதன் மலிவான அட்வென்ஜெர் பைக்கை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது. இந்த பைக்கை பற்றி எந்தவொரு விபரத்தையும் கேடிஎம் நிறுவனம் வெளியிடாவிட்டாலும், ஸ்பை படங்களும் வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த வகையில் தற்போது டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 250 ட்யூக் மற்றும் 390 அட்வென்ஜெர் பைக்குகளின் கலவையாக 250 அட்வென்ஜெர் பைக் இந்த வீடியோவில் தெரிகிறது. ஆனால் 390 அட்வென்ஜெரில் வழங்கப்படுகின்ற பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு இந்த 250சிசி பைக்கிற்கு வழங்கப்படவில்லை.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

அதற்கு பதிலாக ஒற்றை-துண்டாக ஹெட்லேம்ப் விளக்கு உள்ளது. எக்ஸ்ஷோரூம் விலையினால் இந்த ஹெட்லேம்ப் அமைப்பு ஹலோஜன் தரத்தில் வழங்கப்பட்டாலும், எல்இடி டிஆர்எல்கள் உள்ளன. கேடிஎம் நிறுவனத்தின் விற்பனை வரிசையில் 250 ட்யூக் பைக்கிற்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள இந்த அட்வென்ஜெர் பைக், ட்யூக் வெர்சனை காட்டிலும் ரூ.30,000- ரூ.50,000 வரையில் கூடுதல் விலையினை பெறலாம்.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

இந்த கூடுதல் விலைக்கு காரணம் 390 அட்வென்ஜெரின் ஸ்டைலிங் பாகங்களையும் சில வசதிகளையும் 250 அட்வென்ஜெர் பெற்றுவரவுள்ளது. அதாவது 250 ட்யூக்கில் உள்ள எல்சிடி யூனிட்டிற்கு மாற்றாக டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை 250 அட்வென்ஜெர் பைக் பெற்றுவரவுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் விதத்தில் இந்த க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டாலும், 390 அட்வென்ஜெரில் உள்ளதை போன்று ப்ளூடூத் இணைப்பை பெற்றிருக்க வாய்ப்பில்லை. அதேபோல் ஆரம்ப நிலை அட்வென்ஜெர் பைக் என்பதால், ஆஃப்ரோடு ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ரைடு-பை வயர் மற்றும் பல ரைடிங் மோட்களையும் இந்த 250சிசி பைக் இழந்திருக்கும்.

கேடிஎம் 390 அட்வென்ஜெருக்கும் 250 அட்வென்ஜெர் பைக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவைதான்..!

250 ட்யூக்கில் பொருத்தப்பட்டுள்ள 249சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த அட்வென்ஜெர் பைக்கிலும் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் 9000 ஆர்பிஎம்-ல் 30 பிஎச்பி பவரையும், 7500 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் வழங்கப்படுகிறது. 390 அட்வென்ஜெர் பைக்கின் அதே ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள 250 அட்வென்ஜெரின் விலை 390சிசி பைக்கை காட்டிலும் ரூ.65 ஆயிரம் அளவில் குறைவாக ரூ.2.35 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Adventure first look Leaks From Dealer Showcase Event – Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X