விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாகசப் பைக் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், அறிமுக விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

இந்தியாவில் சாகச ரக பைக் மாடல்களுக்கான வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு ரகங்களில் சாகச பைக் மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இந்த சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை கருத்தில்கொண்டு, கேடிஎம் நிறுவனமும் சாகச ரக பைக் மாடல்களை களமிறக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

ஏற்கனவே 390 அட்வென்ச்சர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், அடுத்து 250 அட்வென்ச்சர் பைக் மாடலையும் இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

 விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த புதிய 250 அட்வென்ச்சர் பைக் மாடலை இந்தியாவில் களமிறக்க கேடிஎம் முடிவு செய்துள்ளதாக ஸிக்வீல்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது. இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக, டீலர் பணியாளர்களுக்கான பயிற்சிகளும் கொடுக்கப்படுவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

 விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறித்த ஏராளமான ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த பைக் கேடிஎ் 250 ட்யூக் பைக்கின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, பைக்கின் சேஸீ, எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை இந்த பைக் ட்யூக் 250 மாடலுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த பைக்கில் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அலாய் வீல்கள் பயன்படுத்தப்படும். இந்த பைக்கில் முன்புறத்தில் 100/90-19 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/80-17 அளவுடைய டயரும் உள்ளன. எம்ஆர்எஃப் மீட்டியோர் எஃப்எம்-2 ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 170 மிமீ டிராவல் கொண்ட 43 மிமீ WP அபேக்ஸ் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷன் உள்ளது. பின்புறத்தில் 177 மிமீ டிராவல் கொண்ட WP அபெக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் முன்சக்கரத்தில் 320 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. மேலும், டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டமும், ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது ஏபிஎஸ் பிரேக்கை அணைத்து வைப்பதற்கான வசதியும் உள்ளது.

 விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் 249சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 29.6 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இந்த பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல், ரைடு பை ஒயர், குயிக் ஷிஃப்டர் உள்ளிட்ட வசதிகள் இருக்காது என்பது ஏமாற்றமாக அமையும்.

 விரைவில் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 250 ட்ூக் பைக் மாடலானது ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Adventure is expected to launch soon in the Indian market. According to the latest report, the company is preparing for the pre-launch training process of the upcoming entry-level adventure-tourer motorcycle.
Story first published: Tuesday, October 13, 2020, 14:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X