ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்குகள் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக ஜிக்வீல்ஸ் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அதன் அட்வென்ஜெர் பைக்குகளின் எண்ணிக்கையை அதன் சிறிய ரக 250 அட்வென்ஜெர் பைக் மாடலின் மூலமாக அதிகரிக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை இந்த பைக்குகள் வந்தடைய துவங்கியுள்ளன. இதன் அறிமுகம் தொடர்பான படங்கள் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்தன.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

இதனை தொடர்ந்து பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த வார இறுதியில் கேடிஎம் நிறுவனம் வெளியிடலாம் என கூறப்படுகிறது. 2019 ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உலகளவில் அறிமுகமாகுவதற்கு முன்பே இந்தியாவில் இந்த 250சிசி அட்வென்ஜெர் பைக்கை சோதனை ஓட்டத்தின்போது பார்த்திருந்தோம்.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

ஆனால் 250 அட்வென்ஜெர் ஐரோப்பாவிற்கான மோட்டார்சைக்கிள் கிடையாது என்பதால் இந்த பைக் இத்தாலியில் நடத்தப்படும் 2019 ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவில்லை. மாறாக கேடிஎம் நிறுவனத்தின் தெற்காசிய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

நமக்கு தெரிந்தவரை 250 அட்வென்ஜெர் பைக்கில் 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. 250 ட்யூக் பைக்கில் உள்ளதை போலவே அதிகப்பட்சமாக 30 பிஎஸ் மற்றும் 24 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தலாம்.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

ரைடு-பை வயர், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற எந்த தொழிற்நுட்பமும் இந்த 250சிசி பைக்கில் கேடிஎம் நிறுவனம் வழங்கவில்லை. ஆஃப்-ரோடு மோட் உட்ன் ஏபிஎஸ் மட்டும் தான் முக்கிய பாதுகாப்பு அம்சமாக பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

அட்வென்ஜெர் பயணங்களுக்கு மட்டுமில்லாமல் தொலைதூர நெடுஞ்சாலை பயணங்களுக்கும் இந்த கேடிஎம் பைக் ஏற்றதாக விளங்கும். 250 ட்யூக் பைக்கை போல் 250 அட்வென்ஜெரிலும் எல்இடி டிஆர்எல்களுடன் ஹலோஜன் ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்படவுள்ளது.

ஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்!! குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்

டிஎஃப்டி க்ளஸ்ட்டர் 390 அட்வென்ஜெரில் வண்ண நிறத்திலும் ப்ளூடூத் இணைப்புடனும் வழங்கப்படுகிறது. ஆனால் 250 அட்வென்ஜெரில் அவ்வாறு வழங்கப்பட போவதில்லை. இதனால் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை எதிர்பார்க்க முடியாது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Adventure Spotted At Dealerships. India Launch Expected In The Coming Days
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X