பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

கேடிஎம் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ட்யூக் 250 பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிஎஸ்6 பைக்கில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

ரூ.2.09 லட்சத்தில் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த பைக்கில் முக்கிய அப்கிரேட்டாக என்ஜின் பிஎஸ்6-க்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை விடவும் முக்கிய மாற்றமாக ஹெட்லேம்ப் அமைப்பு எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

ட்யூக் 390 மாடலில் இருந்து பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த எல்இடி ஹெட்லேம்ப்பில் எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் சூப்பர்மோட்டோ மோடையும் கேடிஎம் நிறுவனம் புதிய ட்யூக் 250 பைக்கில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோடில் பின்புற சக்கரத்தில் உள்ள ஏபிஎஸ்-ஐ ஓட்டுனர் முழுமையாக அணைத்து வைக்க முடியும்.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

இவற்றுடன் இந்த பிஎஸ்6 பைக்கில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள டார்க் கால்வனோ மற்றும் சில்வர் மெட்டாலிக் என்ற இரு நிறத்தேர்வுகளிலும் பைக்கின் ஸ்போர்டி, முரட்டுத்தனமான மற்றும் கூர்மையான டிசைனை மேம்படுத்தும் வகையில் பாடி கிராஃபிக்ஸ் சற்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

2020 ட்யூக் 250 பைக்கில் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ள 248சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 29.6 பிஎச்பி பவரையும், 7500 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

மற்றப்படி சஸ்பென்ஷன் உள்ளிட்ட பாகங்களில் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை. இதனால் முன்புறத்தில் 43மிமீ-ல் யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் 10-நிலை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் செட்அப் அப்படியே தொடர்ந்துள்ளன.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

ப்ரேக்கிங்கிற்கு முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் ப்ரேக்குகள் முறையே 320மிமீ, 230மிமீ என்ற அளவில் பொருத்தப்பட்டுள்ளன. 13.5 லிட்டர் கொள்ளவில் எரிபொருள் டேங்கை பெற்றுள்ள இந்த பிஎஸ்6 பைக்கின் மொத்த எடை 169 கிலோவாக உள்ளது.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

இந்த குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிள் இணையற்ற பந்தய மரபு மற்றும் ரேஸிற்கு தயாரான என்ஜின் மற்றும் உயர் தொழில்நுட்ப கூறுகளுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் சுமேத் நாரங் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்6 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.2.09 லட்சம்...

2020 கேடிஎம் ட்யூக் 250 பைக்கிற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் டீலர்ஷிப்ஸ் மற்றும் இணைய வழியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பைக்கின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ட்யூக் 250-க்கு சந்தையில் போட்டியாக சுசுகி ஜிக்ஸெர் 250 மற்றும் யமஹா எஃப்இசட்-25 பைக்குகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
BS6 KTM 250 Duke launched with LED Headlamps
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X