புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

உலக அளவில் சாகச பைக் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கின் புதிய பேஸ் வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள், படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

நடுத்தர வகை சாகசப் பயண வகை பைக் மார்க்கெட்டில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இதன் விலை குறைவான வேரியண்ட் கேடிஎம் 890 அட்வென்ச்சர் என்ற பெயரில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மற்றும் புதிய 890 அட்வென்ச்சர் வேரியண்ட்டுகளுக்கு இடையே தோற்றத்தில் சிறிய அளவிலான வித்தியாசங்கள் உள்ளன.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய 890 அட்வென்ச்சர் பைக்கின் மாடலின் இருக்கை உயரம் 830 மிமீ ஆக உள்ளது. இதனை 850 மிமீ வரை உயரத்தை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த அட்ஜெஸ்ட் செய்யும் வசதி மூலமாக 890 அட்வென்ச்சர் ஆர் வேரியண்ட்டை விட இந்த புதிய ஸ்டான்டர்டு வேரியண்ட்டை தேர்வு செய்வதற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கும்.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

அதேநேரத்தில், இந்த புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கின் முன்புறத்தில் உள்ள WP- Apex ஃபோர்க்குகளை அட்ஜெஸ்ட் வசதி இல்லை. பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற, பின்புற சஸ்பென்ஷன்கள் 200 மிமீ டிராவல் வசதியை பெற்றிருப்பது முக்கிய அம்சமாக கூறலாம்.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கின் முன்புறத்தில் இரண்டு 320 மிமீ ரோட்டர்களுடன் 4 பிஸ்டன் பிஸ்டன் ரேடியல் ஃபிக்ஸ்டு காலிபர் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 260 மிமீ ரோட்டருடன் இரண்டு பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபருடன் கூடிய பிரேக் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் உள்ளன. அவோன் ட்ரெயில்ரைடர் டியூவல் பர்ப்போஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி லைட்டுகள், 20 லிட்டர் ராலி பைக்குகளில் இருப்பது போன்ற பெட்ரோல் டேங்க் அமைப்பு, கைகளுக்கு பாதுகாப்பு தரும் கவச பாகங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கான மவுண்ட், அகலமான ஒற்றை அமைப்புடைய ஹேண்டில்பார், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் இருக்கும் சில தொழில்நுட்ப வசதிகள் இதில் இடம்பெறவில்லை என்பது மிக முக்கிய விஷயமாக இருக்கும். சிங்கிள் பீஸ் இருக்கை, முழுமையான அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய முன்புற சஸ்பென்ஷன், நாபி டயர்கள் உள்ளிட்ட பல வசதிகள் புதிய பேஸ் வேரியண்ட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்!

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 899சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் பை டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு அம்சத்தை பெற்றிருக்கும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM has unveiled the new base-model of the middle-weight adventure-touring motorcycle called the 890 Adventure. The new motorcycle is largely similar to the 890 Adventure R, which was introduced earlier.
Story first published: Wednesday, October 21, 2020, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X