கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

கொரோனா பிரச்னையால், மிலன் மற்றும் இன்டர்மோட் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று கேடிஎம் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

கொரோனா பிரச்னை பூதாகரமாகி உலகத்தை ஆட்டுவித்து வருகிறது. கொரோனாவுடன் உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் நிலையில், இதனை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்து எதுவும் இல்லாமல், ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை உலக நாடுகள் கையில் எடுத்துள்ளன.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

மேலும், கொரோனா பிரச்னை அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன. இதே நிலைப்பாட்டை வர்த்தக நிறுவனங்களும் எடுத்து வருகின்றன.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

இதனால், பாதுகாப்பு கருதி, இந்த ஆண்டு நடக்க இருந்த ஃபார்முலா1 , மோட்டோ ஜீபி ஆகிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களும், ஒலிம்பிக் பந்தயங்களும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

இந்த நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான வாகன கண்காட்சிகளும் கொரோனா பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. டெட்ராய்ட் ஆட்டோ ஷோ ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

இந்த நெருக்கடியான சூழலில், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனமும், ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனமும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், மிலன் மற்றும் இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் கண்காட்சிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

கொரோனா பிரச்னை முடிவுக்கு வருவது குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பார்வையாளர்கள் வர தயங்குவார்கள் என்பதுடன், கொரோனா பரவும் அச்சம் காரணமாக, இந்த கண்காட்சிகளை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

ஜெர்மனியில் உள்ள கலோன்ஜ் பகுதியில் வரும் அக்டோபர் 7 முதல் 11 வரையில் இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் கண்காட்சியும், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வரும் நவம்பர் 5 முதல் 8 வரை ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு!

இந்த நிலையில், உலகின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களான கேடிஎம் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனங்கள் இந்த கண்காட்சிகளை தவிர்க்க உள்ளதாக அறிவித்துள்ளன. மேலும், இந்த நிறுவனங்களை தொடர்ந்து, பிற இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதேபோன்ற முடிவை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு உலக அளவில் பல முன்னணி வாகன கண்காட்சிகள் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகிறது.

Most Read Articles
English summary
KTM and BMW Motorrad has decided that they will not be participating at 2020 EICMA and 2020 INTERMOT motorcycle shows due to corona outbreak.
Story first published: Saturday, April 4, 2020, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X