கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை இதுதானாம்..

கேடிஎம் நிறுவனம் ட்யூக் 390 மற்றும் ட்யூக் 250 பைக் மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரு மோட்டார்சைக்கிள்களும் பிஎஸ்6 அப்டேட்டால் சிறிது விலை அதிகரிப்பை பெற்றுள்ளன.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலங்களில் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதனால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக தயாரித்து வருகின்றன. அதன்படி கேடிஎம் நிறுவனத்தில் இருந்து முதலாவது பிஎஸ்6 பைக்காக 390 அட்வென்ஜெர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அதனை தொடர்ந்து தற்போது இந்த ட்யூக் 390 மற்றும் ட்யூக் 250-ன் பிஎஸ்6 வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ட்யூக் 250 பிஎஸ்6 பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2 லட்சமாகவும், ட்யூக் 390 பிஎஸ்6 பைக்கின் விலை ரூ.2.52 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

முந்தைய பிஎஸ்4 மாடலை விட இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் ரூ.4 ஆயிரம் வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. இந்த இரு ட்யூக் பிஎஸ்6 பைக்குகளையும் ஆன்-ரோட்டில் முறையே ரூ.2.35 லட்சம் மற்றும் ரூ.3.06 லட்சத்தில் பெறலாம்.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

பிஎஸ்6 அப்டேட் மட்டுமில்லாமல், இந்த இரு பிஎஸ்6 பைக்கிற்கும் புதிய நிற தேர்வை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ட்யூக் 250 மற்றும் ட்யூக் 390 மாடல்களை வித்தியாசமான நிறம் மற்றும் கிராஃபிக்ஸ் டிசைனில் இனி சாலையில் பார்க்கலாம்.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மற்றப்படி என்ஜினின் திறன், பைக்கில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. கேடிஎம் ட்யூக் 250 பைக், இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட 390 அட்வென்ஜெர் ரூ.2.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதால், இந்த பைக்கின் டெலிவிரிகளை அடுத்த மாதத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இத்தகைய புதிய பிஎஸ்6 பைக்குகளினால் இனி வரும் மாதங்களில் நிறுவனத்தின் மொத்த விற்பனை அதிகரிக்கும் என கேடிஎம் நிறுவனம் நம்புகிறது. ஏனெனில் 125சிசி மற்றும் 250சிசி பைக்குகள் தான் கேடிஎம் நிறுவனத்தில் அதிகளவில் விற்பனை எண்ணிக்கையை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்கின்றன.

கேடிஎம் ட்யூக்250 பிஎஸ்6 மற்றும் ட்யூக்390 பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதனால் 125சிசி மற்றும் 250சிசி பைக்குகளின் அட்வென்ஜெர் வெர்சனையும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் மாடல் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட நிலையில் இந்தியாவில் இந்த பைக் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 250 அட்வென்ஜெரின் இந்திய அறிமுகத்தை இந்த வருடத்திற்குள்ளாக நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Ktm duke 250 bs6 and duke 390 bs6 launched in India
Story first published: Thursday, January 23, 2020, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X