Just In
- 13 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- Finance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடு ரோட்டில் காலை வாரிய கேடிஎம் 390 ட்யூக் பைக்... புதுவை இளைஞருக்கு நேர்ந்த சோகம்... வீடியோ!
கேடிஎம் பைக்குறித்து இணையத்தில் ஓர் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய இளைஞர்களைக் கவர்ந்த இருசக்கர வாகனங்களில், கேடிஎம் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களும் அடங்கும். கண்கவரும் கவர்ச்சியான தோற்றம், அதி வேக திறன் உள்ளிட்டவை இந்த பைக்கின் ப்ளஸ்ஸாக இருக்கின்றன. எனவேதான் நம் நாட்டு இளைஞர்கள் சிலரின் கனவு பைக்காக இது மாறியிருக்கின்றது.

அப்படியாக ஆசை ஆசையாக வாங்கிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கால் நம் அண்டை மாநிலமான புதுவையைச் சேர்ந்த ஓர் இளைஞர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம்குறித்து இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அந்த வீடியோவில் கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எஞ்ஜின் கவசம் முழுவதுமாக உடைந்து அதன் பாகங்கள் அனைத்தும் கீழே தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்று காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இதைப் பார்க்கும்போது, "பைக்க எங்கப்பா இவ்ளோ வேகமா மோதின" என கேட்குமளவிற்கு அதன் சேதம் மிகப் பெரியளவில் இருந்தது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பைக்கை ஏதோ பாறையில் மிக வேகமாகச் சென்று மோதியதைப் போன்று காட்சியளிக்கின்றது.

ஆனால், நாம் நினைப்பதைப் போல் இந்த பைக் பாறையின் மீது மோதியிருந்தால் இதைவிட பலத்த சேதங்கள் ஒட்டுமொத்த பைக்கிற்குமே ஏற்பட்டிருக்கும். அதேநேரத்தில், ட்யூக் 390 பைக்கின் உரிமையாளரும் தான் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், எஞ்ஜின் கவசம் எப்படி சேதமடைந்தது என்பதும் தனக்கு புரியாத புதிராக இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுதான் கேடிஎம் பைக்கின் நிலைமை. நான் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிக வேகத்திலும் செல்லவில்லை. மணிக்கு 80 கிமீ குறைவான வேகத்திலேயே சென்றுக் கொண்டிருந்தேன். ஆனால் எஞ்ஜின் கவசம் முழுவதும் நொறுங்கியிருக்கின்றது" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞர் பைக்கை சற்று மிதமான வேகத்தில் இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று ஆராய்ந்தபோதே எஞ்ஜின் கவசம் முழுவதுமாக வெடித்து சிதறியதைக் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், எஞ்ஜினுக்குள் இருக்கும் பாகமான கிராங்க்-ஷாஃப்ட் கவுண்டர் பேலன்ஸர்கள் அதன் பிடிப்பை இழந்து தொங்கிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்த சம்பவத்தை வைத்து பார்க்கையில் கேடிஎம் நிறுவனம் மிக மோசமான உதிரி பாகங்களை அதன் தயாரிப்புகளில் பயன்படுத்துகின்றதோ என்ற சந்தேகம் பலருக்கு எழும்பியுள்ளது. ஆனால், தன்னுடைய தயாரிப்புகளில் மிகவும் உறுதியான பாகங்களையேத் தான் பயன்படுத்துவதாக கேடிஎம் சூலுரைத்து வருகின்றது.

எஞ்ஜின் கவசங்களைத் தயாரிக்க கேடிஎம் நிறுவனம், உயர் ரக அலுமினிய மூலக் கூறுகளைப் பயன்படுத்தி வருகின்றது. இது சாதாரணமாகவே மிகவும் உறுதித் தன்மைக் கொண்டவை. ஆகவே, இதனை உடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எனவே, எஞ்ஜினில் ஏற்பட்ட அதிக வெப்பமே இந்த வெடிப்பு சம்பத்திற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

அதேசமயம், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகின்றது. இருப்பினும், வாகன ஆர்வலர்கள் சிலர் இந்த வெடிப்பிற்கு உயர் வெப்ப நிலையே காரணமாக இருக்கும் என அடுத்து கூறுகின்றனர். இதுபோன்ற இக்கட்டானநிலைகளைத் தவிர்க்கவே தரமான கூலிங் ஆயிலைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
தற்போது கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ஏற்பட்டிருக்கும் இந்த கோளாறு சாதாரண வெல்டிங்கால் நீக்கக்கூடிய பழுதல்ல என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இது பெரும் பொருட் செலவை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகும். ஆகவே புதுவையைச் சேர்ந்த இளைஞருக்கு அந்த நாள் மிகவும் துரதிரஷ்டவசமான நாளாக இருந்திருக்கும்.

கேடிஎம் நிறுவனம், அதன் பல்வேறு இருசக்கர வாகனங்களை புனேவில் உள்ள சக்கன் உற்பத்தியாலையில் வைத்தே தயாரித்து வருகின்றது. இங்குதான் ட்யூக் 390 மாடல்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் ட்யூக் 390 இருசக்கர வாகனத்தை இந்தியாவில் 2017ம் ஆண்டுதான் முதல் முறையாக அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கேடிஎம் பைக்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.
Source: Social Media