ரூ.6,999 மாதத் தவணையில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் வாங்கலாம்!

மிக குறைவான மாதத் தவணையுடன் கூடிய சிறப்பு கடன் திட்டம் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, ஆன்ரோடு விலையில் அதிகபட்ச கடன் பெறும் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

இந்தியாவில் அட்வென்ச்சர் எனப்படும் சாகச வகை பைக் மாடல்களுக்கு வரவேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், தொடர்ந்து சாகச ரக பைக் மாடல்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சரியான பட்ஜெட் மற்றும் சிறந்த அம்சங்கள் கொண்ட தேர்வாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் வாகன விற்பனை பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து, கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்காக பல சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

கேடிஎம் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பைக்கின் ஆன்ரோடு விலையில் 80 சதவீதம் வரை கடன் பெற முடியும்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

அடுத்து, கேடிஎம் பைக்கிற்கு பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி மூலமாக ஆன்ரோடு விலையில் 95 சதவீதம் வரை கடன் பெறும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கும், பொருளாதார நிலைக்கும் தக்கவாறு திருப்பி செலுத்தும் கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

கொரோனா பிரச்னையால் பொருளாதார நெருக்கடி அல்லது வருவாய் குறைப்பு பிரச்னையில் சிக்கியிருப்பவர்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டங்கள் சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் இலகு எடை கொண்ட ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 170 மிமீ டிராவல் கொண்ட WP ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 177 மிமீ டிராவல் கொண்ட சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

மெட்ஸீலர் நிறுவனத்தின் நாபி டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் 200 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றுள்ளது. எஞ்சின் அடிப்பாகத்தை பாதுகாப்பதற்காக கீழாக பேஷ் பிளேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

இந்த பைக்கில் இசியூ கன்ட்ரோல் யூனிட், லீன் ஆங்கிள் சென்சார்களுடன் கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஆஃப்ரோடு ஏபிஎஸ் சிஸ்டம், குயிக் ஷிஃப்டர், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் 43 எச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 373சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விதமான சாலை நிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வழங்கும் விதத்தில் இந்த எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இறுக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.6,999 மாதத் தவணை திட்டம்!

கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டபோது ரூ.2.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கப்பட்டது. தற்போது ரூ.3.04 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM has introduced a special EMI scheme for 390 Adventure in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X