Just In
- 3 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Sports
பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேடிஎம் நிறுவனத்தின் புதிய 250 அட்வென்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு
கேடிஎம் நிறுவனத்தின் புதிய 250 அட்வென்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் 250 அட்வென்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ. 2.48 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இது 390 அட்வென்சர் மாடலின் விலை குறைந்த மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் 390 அட்வென்சர் பைக்கின் குறிப்பிட்ட சில அம்சங்களுடன் இந்த பைக் உருவாகியுள்ளது.

எனவேதான் 390 அட்வென்சர் மாடலின் சகோதர மாடலாக இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, குறைந்த விலையில் இது விற்பனைக்கு கிடைக்கும். அதேசமயம், பல்வேறு பிரீமியம் அம்சங்களை இந்த பைக் தாங்கியிருக்கின்றது. டிஎஃப்டி திரை, எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய ஹாலோஜன் ஹெட்லேம்ப், ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த பைக்கில் காணப்படுகின்றது.

இந்த பைக்கில் 248.8 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜினையே கேடிஎம் பொருத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 30 எச்பி மற்றும் 23 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இதே திறன் கொண்ட எஞ்ஜின்தான் ட்யூக் 250 பைக்குகளில் பயன்படுத்தப்படுகின்றது.

கேடிஎம் 250 அட்வென்சர் பைக்கில் ஆஃப் மற்றும் ரோடில் பயணம் செய்வதற்காக பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. உயரம், இந்த பைக் பயணிக்கும்போது 170 மிமீ உயரத்தில் பயணிக்கும் அனுபவத்தை வழங்கும். இதற்கேற்ப ஃபோர்க்கே முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பின் பகுதியில் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்து நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸை வழங்குகின்றது.

பிரேக்கிங் வசதி, இந்த பைக்கில் பாதுகாப்பான பிரேக்கிற்காக பிரெம்போ உடன் கூடிய 320 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பின் பக்க வீலில் 230 மிமீ அளவுள்ள டிஸ்க் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ஏற்கனவே கூறியதைப் போல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஏபிஎஸ் சிஸ்டம் பாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதுவே ஆஃப் ரோடு பயணத்தின்போது மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க உதவும். இந்த பைக்கின் எரிபொருள் நிரப்பும் தொட்டி 14.5 லிட்டர் ஆகும். இதன் மைலேஜ் விபரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.