ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

உலகின் பெரும்பான்மையான நாடுகள் பலவற்றிலும் தற்சமயம் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் அனைவரும் அறிந்தது தான், கொரோனா வைரஸ்.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

ஊரடங்கினால் மக்கள் வீட்டுக்குள்ளயே முடங்கி உள்ளனர். சில முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதால் வீட்டிற்குள் தினமும் செய்த வேலையே திரும்ப திரும்ப செய்து கண்டிப்பாக அனைவருக்கும் அலுத்து போயிருக்கும்.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

இதனால் சிலர் அன்றாட பணியில் இருந்து வித்தியாசமான செயல்களில் ஈடுப்பட முயற்சித்து வருகின்றனர். அதாவது இந்த ஊரடங்கு காலத்தில் தினமும் சாப்பிட்டு விட்டு தூங்கி தூங்கி சோம்பேறியானவர்கள் ஜிம்மிற்கு போக முடியாததால் வீட்டிலேயே ஜிம்மை உருவாக்கி வருகின்றனர்.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

இந்த வகையில் பிரபல சகதி பைக் ரைடரான டெய்லர் ராபர்ட் தனது கேடிஎம் மோட்டார்சைக்கிளை ஜிம் பொருளாக பயன்படுத்தி உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதனை அவர் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ உங்கள் பார்வைக்காக இதோ..

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

ரெட் புல் அத்லெட்டிக்கான டெய்லர் ராபர்ட் தனது நான்கு வயதிலிருந்து இருந்து சகதி பைக் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். இதனால் இவர் தனது பெரும்பான்மையான இளமை பருவத்தை பல நாடுகளில் மோட்டோக்ராஸ் ட்ராக்குகளிலேயே செலவழித்துள்ளார். இருப்பினும் இவர் தன்னை ட்ராக்கில் சிறந்த ரேஸராக ஒப்பு கொண்டதில்லை.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

ஆனால் இவரது ரேஸிங் திறன் கடந்த சில வருடங்களில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால் உலகின் டாப் 5 ஃபினிஷெர்களில் இவரும் ஒருவர். 15 வயதில் விபத்து ஒன்றில் சிக்கிய ராபர்ட், அது அவரது ரேஸிங் கேரியருக்கே திருப்புமுனையாக அமையும் என அறியவில்லை.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

ஏனெனில் இந்த விபத்து தான் ராபர்ட்க்கு மோட்டோக்ராஸ் மீதான ஆர்வத்தை குறைந்து அவரது தந்தை கலந்து கொண்டு வந்த உலகளாவிலான ஆஃப்-ரோடு சாம்பியன்ஷிப் சீரிஸிற்கு அவரை அழைத்து சென்றது. இதன்படி 2006ல் முழு சீரிஸில் பங்கேற்ற ராபர்ட் 2008ல் ப்ரோ2 க்ளாஸ் சாம்பியன்ஷிப்பை பெற்றார். இதன் மூலம் இவருக்கு ப்ரோ ரேஸிங்கில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

பிறகு 2009ல் ப்ரோ ரேங்ஸ் முழு நேர போட்டியில் கலந்து கொண்டவர், புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் ஃபினிஷிங் செய்து ரேஸ்-ஐ வென்றார். அதன்பின் 2012ல் ராபர்ட் வென்ற தனது முதல் உலகளாவிலான ஆஃப்-ரோடு சாம்பியன்ஷிப் ப்ரோ பட்டம் அவரை அர்ஜெண்டினாவில் நடைபெற்ற எக்ஸ் கேம்ஸ், எண்டூரோக்ராஸ், ஐஎஸ்டிஇ, பஜா உள்ளிட்ட போட்டிகளுடன் குறிப்பிட்ட சில எக்ஸ்ட்ரீம் எண்டூரோ நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து சென்றது.

ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

இதில் ஐஎஸ்டிஇ போட்டியில் மூன்று தங்க மெடல்களை வென்ற டெய்லர் ராபர்ட் அமெரிக்கன் ரேஸர்களில் முக்கியமான இடத்தை கடந்த சில வருடங்களாக தக்க வைத்து கொண்டுள்ளார். இத்தகையவர் ஆஃப்-ரோடு கேடிஎம் பைக்கை உடற்பயிற்காக பயன்படுத்தியுள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

View this post on Instagram

No gym? No problem! #myKTMworkout @ktmusa

A post shared by Taylor Robert (@taylor_robert33) on

கேடிஎம் பைக்குகள் பொதுவாகவே எடை அதிகமானதாகவே சந்தையில் பார்க்கபடுகிறது. இவ்வாறான பைக்கை உடற்பயிற்காக பயன்படுத்தி இருப்பது உண்மையில் ஆச்சிரியமே. டெய்லர் ராபர்ட்டை பார்த்து யாரும் தங்களது பைக்குகளை உடற்பயிற்சிக்காக பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் உண்மையில் இது ஆபத்தானது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KTM Motorcycle Doubles Up As Fitness Equipment In Lockdown WorkoutVideo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X