கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் இந்திய சந்தையில் அதன் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய நிறத்தேர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

கேடிஎம் பிராண்டின் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளில் எண்ட்ரீ-லெவல் ஆர்சி125, ஆர்சி200 மற்றும் டாப் ஆர்சி390 உள்ளிட்ட ஆர்சி பைக்குகள் அடங்குகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான புதிய நிறங்கள் தற்போது கூடுதல் தேர்வுகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

இதில் ஆர்சி125 டார்க் கால்வனோ பெயிண்ட் அமைப்பையும், ஆர்சி200 புதிய எலக்ட்ரானிக் ஆரஞ்ச்சையும், பெரிய தோற்றத்தை கொண்ட ஆர்சி390 மெட்டாலிக் சில்வர் நிறத்தையும் புதியதாக பெற்றுள்ளன. முன்னதாக இவற்றிற்கு கடந்த பிப்ரவரி மாதத்திலும் புதிய பெயிண்ட் அமைப்பை கேடிஎம் நிறுவனம் வழங்கி இருந்தது.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய நிறங்களுக்கு ஏற்ப இந்த ஆர்சி பைக்குகளின் விலைகள் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறங்களுடன் இந்த புதிய நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு பிடித்தமான நிறங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இயக்குனர் சுமீத் நராங் கூறுகையில், கேடிஎம் ஆர்சி பைக்குகள் ஆனது மோட்டோஜிபி ரேஸரான கேடிஎம் ஆர்சி16-ன் தொழிற்நுட்பம் மற்றும் வடிவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இயந்திரங்களாகும். முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்டு வழங்கப்படும் இவை கேடிஎம் பிராண்டிற்கு வலிமையான மற்றும் வளர்ந்துவரும் பங்களிப்பை வழங்குகின்றன.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

மேலும், இந்தியாவில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களின் ஆர்வலர்கள் இவற்றின் கூர்மையான தோற்றத்தையும், அற்புதமான நிறத்தேர்வுகளையும் விரும்புகிறார்கள். இவற்றின் தற்போதுள்ள வரம்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய வண்ணங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

ஒவ்வொரு கேடிஎம் ஆர்சியிலும் இந்த கூடுதல் நிறத்தேர்வு, இளம் மற்றும் லட்சிய பைக்கிங் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை பெறும் என நம்புவதாக கூறினார். இந்த வகையில் ஆர்சி390-க்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள மெட்டாலிக் சில்வர் நிறம் முற்றிலும் புதியதாகும்.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

இதனாலும், கேடிஎம் பிராண்டின் முதன்மை மாடலாகவும் ஆர்சி390 விளங்குவதால் இதற்கு மட்டும் ஆர்சி கிராஃபிக்ஸ் மிகவும் பளிச்சிடும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆர்சி390-ல் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி மற்றும் 36 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தகூடிய 373.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுகிறது.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

இந்த ஆர்சி பைக்கில் சிறப்பம்சங்களாக ரைட்-பை-வயர், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் பெரிய அளவில் 320மிமீ-ல் முன்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மற்றப்படி ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகளுக்கு தற்போது புதியதாக வழங்கப்பட்டுள்ள நிறங்கள் இந்திய சந்தைக்கு பழையதுதான்.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

அதாவது ஆர்சி200 பெற்றுள்ள எலக்ரானிக் ஆரஞ்ச் நிறத்தில் ஆர்சி125 பைக்கும், ஆர்சி125-க்கு வழங்கப்பட்டுள்ள டார்க் கால்வனோ பெயிண்ட் அமைப்பிலும் ஆர்சி200-ம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு வழங்கப்படும் நிறங்களை கேடிஎம் நிறம் தற்போது மாற்றி மட்டும்தான் கொடுத்துள்ளது.

கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...

இருப்பினும் இவை இரண்டிற்கும் வழங்கப்படும் கிராஃபிக்ஸ்களில் குறிப்பிடத்தக்க வகையிலான மாற்றம் இருக்கும். கேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.59 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.2.53 லட்சம் என்ற அளவில் உள்ளன. இவைதான் தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் மலிவான ட்ராக்-ரெடி மோட்டார்சைக்கிள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM launches new colors in the RC series
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X