கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

கேடிஎம் நிறுவனம் 890 அட்வென்ச்சர் பைக்கை நாளை (அக்.19) உலகளவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

கேடிஎம் நிறுவனம் முன்னதாக இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் 890 அட்வென்ச்சர் ஆர் மற்றும் 890 அட்வென்ச்சர் ராலி பைக்குகளை வெளியிட்டது. அதனை தொடர்ந்து இவற்றின் விலை குறைவான வேரியண்ட்டாக 890 அட்வென்ச்சர் நாளை உலகளவில் அறிமுகமாகவுள்ளது.

View this post on Instagram

Stay tuned! October 19th, 2020 #KTM #ReadyToRace #GoAdventure

A post shared by KTM (@ktm_official) on

இந்த நிலையில் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கிற்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள புதிய 890 அட்வென்ச்சரின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 890 அட்வென்ச்சர் பைக்கின் தோற்றம் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் வடிவில்தான் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

ஏனெனில் கேடிஎம் அதன் 390 அட்வென்ச்சர் பைக்கில் இருந்து மிக பெரிய என்ஜினை கொண்ட 1290 அட்வென்ஜெர் பைக் வரையில், வடிவமைப்பில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாணியை தான் கொண்டுள்ளது. ஆனால் இந்த பாணி உலக மக்களிடையே வெற்றி பெறுகிறது என்பது உண்மையே.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

காம்பெக்ட் எரிபொருள் டேங்க் உடன் 890 அட்வென்ச்சர் பைக்கின் உடலில் பெரிய அளவில் பேனல்கள் வழங்கப்படவில்லை. இருக்கை 890 அட்வென்ச்சர் ஆர்-ல் இருப்பதுபோல் ஒற்றை-துண்டாக இல்லாமல் பிளவுப்பட்டதாக உள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம் பார்க்க முடிகிறது.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் 889சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. 890 அட்வென்ச்சரிலும் தொடரப்படவுள்ள இந்த என்ஜின் 790 அட்வென்ச்சரின் என்ஜின் உடன் ஒப்பிடுகையில் பெரிய போர் மற்றும் ஸ்ட்ரோக்கை கொண்டுள்ளது. இதனால் அதனை விடவும் 9 பிஎச்பி கூடுதலாக 103 பிஎச்பி மற்றும் 12 என்எம் கூடுதலாக 104 என்எம் டார்க் திறனையும் இந்த 889சிசி என்ஜின் வெளிப்படுத்துகிறது.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

என்ஜினின் கூடுதல் ஆற்றல் மற்றும் மேம்படுத்தப்பட்ட டார்க் திறனுக்கு அப்டேட் செய்யப்பட்ட பிஸ்டன்கள், வால்வுகள், வால்வு சுருள்கள், இணைக்கும் ராட்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. இவை தான் என்ஜினை முன்பை விட எடை மிக்கதாக மாற்றியுள்ளன.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

அதேநேரம் என்ஜினின் மென்மையான செயல்திறன் மற்றும் ஹேண்டிலிங் மேம்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் திருத்தியமைக்கப்பட்ட டிசைனிலான மேம்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்மிஷனும் தடையற்ற கியர் மாற்றத்திற்கு புதிய ஸ்லிப்பர் க்ளட்ச்சும் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

அதேபோல் சிறந்த கூலிங்கிற்காகவும் ஷெல்ஃபின் ஆயுளை அதிகரிப்பதற்காகவும் என்ஜின் உடன் ஆயில் கூலர் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் அமைப்பின் இத்தகைய சிறப்பம்சங்கள் அனைத்தையும் 890 அட்வென்ச்சரிலும் கேடிஎம் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

அதேபோல் 890 அட்வென்ச்சரின் ஆர் மற்றும் ராலி ட்ரிம்களில் வழங்கப்பட்டுள்ள சில பிரத்யேகமான வசதிகளை புதிய 890 அட்வென்ச்சர் பைக் இழக்கும் என்பது நிச்சயம். இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கின் முன் சக்கரம் 21 இன்ச்சிலும் பின் சக்கரம் 18 இன்ச்சிலும் (இரண்டும் ஸ்போக்டு தான்) வழங்கப்படவுள்ளன.

கேடிஎம்-இன் புதிய 890சிசி அட்வென்ச்சர் பைக்... வேற லெவலில் வருகிறது...

அதேபோல் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கையும், பின்புறத்தில் மோனோ-ஷாக்கையும் இந்த பைக் பெற்றுவரும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இந்திய சந்தைக்கு கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் இப்போதைக்கு வரும் சூழல் இல்லை. ஏனெனில் தற்சமயம் கேடிஎம் இந்தியா நிறுவனம் அதன் மலிவான அட்வென்ச்சர் பைக்காக கொண்டுவரப்படவுள்ள 250 அட்வென்ச்சரின் அறிமுக பணிகளில்தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 890 Adventure unveil on October 19
Story first published: Sunday, October 18, 2020, 3:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X