பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் பல லட்ச ரூபாய் செலவில் புதிய அட்வென்சர் பைக் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மிகப்பெரிய வாகன பிரியர்களாக இருக்கின்றனர். இதற்கு கடந்த காலங்களில் நடிகர்களும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களைப் பற்றி வெளியாகிய தகவல்களே சான்று. இந்த நிலையில், பாலிவுட் திரைப்பட நடிகர்களில் ஒருவரான குனால் கேமு, தான் ஒரு மிகப்பெரிய வாகன ஆர்வலர் என்பதை நிரூபிக்கும் வகையில் புதிதாக ஓர் இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கின்றார்.

பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

இதற்காக அவர் பல லட்சங்களை வாரி இறைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புத்தம் புதிய காரின் விலையில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஆர் 1250 ஜிஎஸ் பைக்கை வாங்கியிருக்கின்றார். இது ஓர் அட்வென்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். நெடுந்தூரம் மற்றும் சாகச பயணங்களுக்கு ஏற்ற பைக் இதுவாகும்.

பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

இந்த பைக்கையே நடிகர் குனால் கேமு தற்போது அவரது கராஜில் புதிதாக சேர்த்துள்ளார். இந்த பைக் இந்தியாவில் ரூ. 22.35 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது உயர்நிலை மாடலின் விலையாகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை 20.45 லட்ச ரூபாயாக இருக்கின்றது. இவ்விரு விலையுமே எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். ஆகையால், ஆன்-ரோடில் இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

இந்த பைக் இந்தியாவில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜிஎஸ் ஸ்டாண்டர்டு, ஜிஎஸ் ப்ரோ, ஜிஎஸ் அட்வென்சர் ஸ்டாண்டர்டு மற்றும் ஜிஎஸ் அட்வென்சர் ப்ரோ ஆகியவை ஆகும். இத்தகைய பன்முக தேர்வுகள் கொண்ட பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த ஆண்டே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தியாவில் அட்வென்சர் பயண பிரியர்கள் மத்தியில் இந்த பைக் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

இந்த பைக்கில் 6.5 இன்ச் அளவுள்ள வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது, ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இத்துடன், பன்முக ரைடிங் மோட்கள், தானியங்கி ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பாலிவுட் நடிகர் வாங்கிய புதிய பைக்... இந்த விலைல ஒரு காரையே வாங்கியிருக்கலாம்... இதோட விலை இவ்வளவா?

சிறந்த எஞ்ஜின் திறனுக்காக பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக்கில் 1245 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 134 பிஎச்பி மற்றும் 143 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த, 6 ஸ்பீடு வேகக் கட்டுப்பாட்டு கருவியில் இயங்குகின்றது. இத்தகைய அதி திறன் எஞ்ஜின் கொண்ட பைக்கையே பாலிவுட் நடிகர் குனால் கேமு தற்போது வாங்கியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kunal Khemu Buys BMW R1250 GS Adventure Superbike. Read In Tamil.
Story first published: Tuesday, December 1, 2020, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X