Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 8 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
உலகம் முழுக்க.. கொரோனவால் 101,396,366 பேர் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'மேட் இன் இந்தியா' பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள், ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் புதிய ஜி310ஆர் (BMW G310R) பைக்கை ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழகத்தில் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓசூரில் உள்ள தனது ஆலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்தான், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இங்கிருந்துதான் இந்த பைக் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புகைப்படங்களை வைத்து பார்க்கையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலும், ஐரோப்பிய சந்தைக்கான மாடலும் ஒன்று போலவே இருப்பது போல் தெரிகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மிக முக்கியமாக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள யூரோ 5 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான வகையில் புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் சமீபத்தில்தான் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் 2.45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில், புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலில் இன்ஜின் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் ஜி310ஆர் பைக்கில் கூடுதலாக சில வசதிகளையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் சேர்த்திருந்தது.

ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜி310ஆர் மோட்டார்சைக்கிளுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் 4,875 பவுண்டுகளை விலையாக நிர்ணயம் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 4.80 லட்ச ரூபாய் ஆகும். ஐரோப்பிய சந்தையில் முன்பு இருந்ததை விட தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய சந்தையில் இதற்கு நேர்மாறாக புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டிருந்தது. அதாவது பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடுகையில், சுமார் 54,000 ரூபாய் விலை குறைப்பை செய்து பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அதிரடி காட்டியது. இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த விலை குறைப்பு அஸ்திரத்தை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் கையில் எடுத்திருந்தது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில், மேம்படுத்தப்பட்ட 313சிசி, லிக்யூட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9,500 ஆர்பிஎம்மில் 33.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் அதிகபட்சமாக மணிக்கு 143 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லக்கூடியது. அத்துடன் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. 2021 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் டிசைன் அப்டேட்களை பெற்றிருப்பதுடன் மட்டுமல்லாது, மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மற்றும் சில கூடுதல் வசதிகளையும் பெற்றுள்ளது.