அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

மஹிந்திரா க்ரூப்பின் டூவீலர் ப்ராண்ட் இந்திய சந்தையில் மோஜோ பிஎஸ்6 பைக்கை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பிஎஸ்6 பைக் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

மோஜோ பைக் மாடல் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ளதை ஏற்கனவே இணையத்தள பக்கத்திற்கு அதன் பெயரை கொண்டுவந்து தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த பிஎஸ்6 பைக் புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படத்தில் பைக் தற்போதைய பிஎஸ்4 வெர்சனில் இருந்து பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்கவில்லை. இதனால் மொத்த தோற்ற அளவில் பார்க்கும்போது புதிய மோஜோ பைக் வழக்கமான தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ள இதன் 294.72சிசி, லிக்யூடு-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 26.29 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

மற்ற சிறப்பம்சங்களாக இந்த பைக்கில் இரட்டை ஹெட்லேம்ப்கள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டர், 21-லிட்டர் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை ஆரம்பத்தில் இருந்தே உள்ளன. இவை அனைத்தும் இதன் பிஎஸ்6 வெர்சனிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

தரையில் இருந்து ரைடரின் இருக்கையை 815மிமீ உயரத்தில் பெற்றுள்ள மோஜோ பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் மோனோ-ஷாக் செட்அப்பும் வழங்கப்படுகிறது. ப்ரேக்கிங் பணிக்கு இரு முனைகளிலும் டிஸ்க் ப்ரேக்குகள் 320மிமீ மற்றும் 240மிமீ அளவில் கொடுக்கப்படுகின்றன. இதனுடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸும் உள்ளது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

முதன்முதலாக 2015ல் இந்தியாவில் அறிமுகமான மஹிந்திரா மோஜோ பைக்கிற்கு அதன் இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பினால் ஆரம்பத்தில் மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதனால் மஹிந்திரா டூவீலர்ஸ் ப்ராண்ட் இந்த பைக்கை யுடி300 மற்றும் எக்ஸ்டி300 என இரண்டாக பிரித்தது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

இதில் ஒன்று மலிவான விலை கொண்டது. மற்றொன்று கூடுதலான இயந்திர பாகங்களுடன் காஸ்ட்லீயான பைக் மாடலாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த தந்திர செயல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இதன் காரணமாக வேரியண்ட்களின் எண்ணிக்கை குறைத்தது.

அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..?

2019ல் இந்த பைக் ஒரே ஒரு வேரியண்ட்டாக மோஜோ 300 ஏபிஎஸ் என்ற பெயருடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ்-ஐ உடன் அறிமுகமானது. தற்போது பிஎஸ்6 அப்டேட்டை பெற்றுள்ள இந்த 300சிசி பைக்கின் விலை நிச்சயம் மேம்படுத்துதல் பணிக்காக அதிகரிக்கப்படும்.

Most Read Articles

English summary
BS6 Mahindra Mojo 300 spotted testing for the first time
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X