மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மஹிந்திரா மோஜோ பைக்கிற்கான அட்டகாசமான டீலர்ஷிப் ஒன்று பெங்களூருவில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய டீலர்ஷிப்பையும் மஹிந்திரா மோஜோ பைக்கை பற்றியும் இந்த செய்தியில் காணலாம்.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மஹிந்திரா மோஜோ 300, வாடிக்கையாளர்கள் கண்டுக்கொள்ளாமல் விட்ட அட்டகாசமான பைக் மாடல்களுள் ஒன்றாகும். கடந்த 2015 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான இந்த சிங்கிள்-சிலிண்டர் டூரர் பைக்கிற்கு சரியான போட்டி மாடல் அறிமுகமான சமயத்தில் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

ஆனால் தற்போது மோஜோ 300 பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் மோஜோ 300 பைக் மாடலை இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகிறது. மேலும் மோஜோ மாடலுக்கென தனியாக புதிய டீலர்ஷிப்களையும் இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

இந்த வகையில் ஸ்காண்டா மோட்டார்ஸ் என்ற பெயரில் மோஜோ பைக்கிற்கான முதல் டீலர்ஷிப் பெங்களூர் ராஜாஜி நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய டீலர்ஷிப் நிறுவனத்திற்கு பிரத்யேகமாக மோஜோ அவுட்லெட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மோஜோ 300 பைக் ஆரம்பம் முதலே சந்தையில் பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கைகளை பெறாவிடினும், இந்த பைக்கில் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் போன்ற முக்கியமான வசதிகளை வழங்க தயாரிப்பு நிறுவனம் மறக்கவில்லை.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

அறிமுகமான புதியதில் யுடி300 மற்றும் எக்ஸ்டி300 என்ற இரு விதமான தோற்றங்களில் சந்தைப்படுத்தப்பட்ட மோஜோ மாடல் தற்போது மஹிந்திரா மோஜோ 300 என்ற ஒரே ஒரு தோற்றத்தில் மட்டும் தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.95 லட்சமாக உள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மஹிந்திரா மோஜோ 300 பைக் இன்னமும் பிஎஸ்4 தரத்தில் தான் விற்பனையில் உள்ளது. இதன் பிஎஸ்6 வெர்சனுக்கான முன்பதிவுகளை அடுத்த மாதத்தில் இருந்து ஏற்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்4 மோஜோ பைக்கை சில டீலர்ஷிப்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

அவர்களும் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக இந்த பிஎஸ்4 பைக்குகளை விற்பனை செய்தாக வேண்டும். இதனால் மோஜோ300 மாடலுக்கு டீலர்ஷிப்கள் அட்டகாசமான சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இந்த அவுட்லெட்கள் மூலமாக சிறந்த அனுபவத்தையும், ஓனர்ஷிப் ப்ளாட்ஃபாரத்தையும் மஹிந்திராவின் இந்த டூரர் பைக் மாடல் பெற இயலும்.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மேலும் மோஜோ பைக்குகளுக்கான ஷோரூம்கள், மஹிந்திரா மில்லேனியம் மால்களை போன்று சிவப்பு/வெள்ளை என்ற ப்ராண்ட் நிறங்களில் கிராஃபிக்ஸ் டிசைன்களை பெறவுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் அதன் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மஹிந்திரா மோஜோ 300 பைக்கில் 295சிசி லிக்யூடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 27 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கி வருகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையை தற்சமயம் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் ஜாவா 42 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் இந்த தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...

மஹிந்திரா மோஜோ 300 பைக், சிறந்த எரிபொருள் திறன் கொண்ட 300சிசி பைக்குகளுள் ஒன்று. இருப்பினும் இதன் பிரிவில் உள்ள மற்ற 250-300சிசி பைக்குகளுக்கு கடுமையான போட்டியினை கொடுக்க மோஜோ 300 பைக்கில் நிச்சயம் அப்டேட்களை கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டாக வேண்டும்.

Source: Rushlane

Most Read Articles

English summary
Mahindra Mojo's new exclusive dealership in Bangalore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X