இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கக்கூடிய 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களின் பட்டியலைத் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

இந்தியாவில் பைக்குகளுக்கு நிலவுவதைப் போலவே ஸ்கூட்டர்களுக்கும் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. அதிலும், அண்மைக் காலங்களாக இந்திய இளைஞர்கள் மத்தியில் 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு சற்று தூக்கலாகவே காணப்படுகின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

அந்தவகையில், இந்தியர்களின் மனம் கவர்ந்தும் 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரில், எந்த ஸ்கூட்டர் அதிக மைலேஜை வழங்குகின்ற என்ற தகவலையே இப்பதிவில் காணவிருக்கின்றோம். நாம் காணவிருக்கும் இந்த ஸ்கூட்டர்கள் 110 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களைப் போன்றில்லாமல், அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

நாம் பார்க்கவிருக்கும் ஸ்கூட்டர்களின் வரிசையில் யமஹா ரேஇசட்ஆர் 125 ஸ்கூட்டரே முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த அதிகபட்சமாக 66.23 கிமீ மைலேஜை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்குகின்றது. ஆகையால், இந்த ஸ்கூட்டரே இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் 125 ஸ்கூட்டராக இருக்கின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

இதற்கு அடுத்த இடத்தில், அதாவது இரண்டாவது இடத்தில்ர சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 55.88 கிமீ மைலேஜே வழங்குகின்றது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், சுசுகி நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான அக்சஸ் 125 இருக்கின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 52.45 கிமீ மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் என்டார்க்125 ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த 51.54 மைலேஜை ஒரு லிட்டர் பெட்ரோலுக்குக் கொடுக்கின்றது. எனவேதான் இந்த ஸ்கூட்டர் நம்முடைய இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

கடைசியாக ஐந்தாவது இடத்தில் அப்ரில்லா ஸ்டார்ம் ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 50.08 கிமீட்டர் செல்லும். எனவேதான் இந்த ஸ்கூட்டர் கடைசி இடத்தில் இருக்கின்றது. இதுதவிர 125 சிசி திறனில் வெஸ்பா நிறுவனத்தின் ரேஸிங் சிக்ஸ்டீஸ்125 மாடல் ஸ்கூட்டரும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

இந்த ஸ்கூட்டர் மிகக் குறைந்தபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47.75 கிமீ தூரம் செல்லும். இது 50 கிமீட்டருக்கும் குறைவு என்பதால் இந்த பட்டியலில் இதனைச் சேர்க்கவில்லை. இருப்பினும், 125சிசி திறனில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய ஸ்கூட்டர் இதுவென்பதால் கடைசியாக வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா..? இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்!

மேலே பார்த்த மைலேஜ் விவரத்தைப் பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

வரிசை ஸ்கூட்டர் மைலேஜ் விபரம்
1 யமஹா ரே இசட்ஆர் 125 66.23 kmpl
2 சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 55.88 kmpl
3 சுசுகி அக்சஸ் 125 52.45 kmpl
4 டிவிஎஸ் என்டார்க் 125 51.54 kmpl
5 அப்ரிலியா ஸ்டார்ம் 50.08 kmpl
6 வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் 125 47.75 kmpl
Most Read Articles
English summary
Most Fuel Efficient 125cc Scooter In India: Here Is Full List. Read In Tamil.
Story first published: Saturday, November 28, 2020, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X