ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

தற்போதைய காலக்கட்டத்தில் ஏகப்பட்ட மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் பிராண்ட்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது சற்று கடினமான ஒன்றாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ளது. பைக்கிற்கு ஏற்ற நிறத்தில், வடிவத்தில் தேர்ந்தெடுப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் கிடையாது.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

ஆனால் சிறந்த பிராண்டிலும், ஸ்டைலை எதிர்பார்த்து முகத்திற்கு ஏற்ற விதத்திலும் தேர்ந்தெடுப்பதில் சிலர் கோட்டைவிடுகின்றனர். ஏனெனில் மோட்டார்சைக்கிள் ஓட்டிகளுக்கு ஹெல்மெட் தான் பிரதான பாதுகாப்பு அம்சமாகும். இத்தகைய ஹெல்மெட் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், அவற்றை பற்றி தவறாக உலாவும் சில விஷயங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

1. சாலையை தெளிவாக பார்க்க முடியாது

ஹெல்மெட் அணிவதால் சரியாக பாதையை பார்க்க முடியாது என்கிற கருத்து உள்ளது. முழு முகத்தையும் மறைக்கும் ஹெல்மெட்டினால் கீழ்நோக்கி பார்ப்பது சற்று சிரமம்தான். இதற்காக மேற்கூறிய கருத்தை முற்றிலும் உண்மை என சொல்லிவிட முடியாது.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

ஏனெனில் இயங்கும் பாதையை எந்தவொரு குறையுமின்றி பார்க்கும் விதத்தில் தான் பெரும்பாலும் ஹெல்மெட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஹெல்மெட் அணிந்திருக்கும்போது 210 கோண பார்வையை யாராயினும் நிச்சயம் பெறலாம்.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

2. ஹெல்மெட் மற்ற வாகனங்களின் சத்தங்களை தடுக்கிறது

இந்த கருத்தும் முற்றிலும் பொய்யாகும். ஏனெனில் ஹெல்மெட்கள் (பிராண்ட் ஹெல்மெட்கள்) வெளி ஹார்ன் சத்தங்கள் ஓட்டுனருக்கு கேட்கும்படி தான் வடிவமைக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்த விஷயத்தில் ஹெல்மெட்டின் மூலமாக நன்மை தான் உள்ளது. அதாவது அதி வேகங்களின்போது (100kmph-க்கும் மேல்) காற்றின் இரைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றை கிட்டத்தட்ட அனைத்து ஹெல்மெட்களும் தடுத்துவிடுகின்றன.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

3. ஹெல்மெட்டினால் தலையில் சூடு அதிகரிக்கும்

ஹெல்மெட்களின் உட்புறம் குமிழ்கள் நிறைந்த பஞ்சு போன்ற வெப்பம் கடத்தா பொருள்களினாலும் வடிவமைக்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிப்புற பிளாஸ்டிக் சூடானாலும், வெப்பம் முழுவதுமாக உட்புறத்திற்குள் இறங்குவதில்லை. இந்த பொய்யான கருத்து நிச்சயம் இந்தியாவில் மட்டும் தான் இருக்கும்.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

கோடை காலங்களில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் சூடான எக்ஸாஸ்ட் குழாய்களுக்கு அருகில் முகம் முழுவதும் மூடப்பட்ட கவசத்துடன் நின்றால், எவராயினும் உள்ளே வேர்க்க தான் செய்யும். வெளியில் வெப்பம் கொளுத்தினாலும், உள்ளே ஏசி போட்டாற்போல் குளுகுளுவென்று இருக்கும்படியான பட்ஜெட் ஹெல்மெட்கள் தயாரிக்கும் அளவிற்கு இன்னும் நாம் செல்லவில்லை.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

4. நகர்புற சாலை பயணங்களுக்கு ஹெல்மெட் அவசியமில்லை.

உண்மையில் கிராமப்புற சாலைகளை காட்டிலும் நகர்புற சாலைகளில் தான் ஹெல்மெட் அணிவது அவசியமாகும். ஏனெனில் விபத்துகள் ஏற்படவும், மக்கள் தொகையும் நகரங்களில்தான் அதிகம். அதுமட்டுமில்லாமல், கிராம சாலைகளில் பைக்கை ஓட்டும்போது நம்மையும் நமது மோட்டார்சைக்கிளையும் கண்ட்ரோலில் வைத்து கொண்டாலே போதும்.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

ஆனால் வாகனங்கள் அதிகமான நகர்புறங்களில் நமது மோட்டார்சைக்கிளை கவனிக்கும் அதே நேரம் அருகில் செல்லும் வாகனங்களின் மீதும் ஒரு கண் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுதான் இந்த பொய்யான கருத்திற்கு காரணமாக இருக்கலாம் (அருகில் செல்லும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாது). ஆனால் சிறிய விபத்துகளும் பெரிய அளவில் சென்று முடிய வாய்ப்புள்ள நகர்புற சாலைகளில் தான் ஹெல்மெட்டின் தேவை அதிகம் என்பது எங்களது கருத்து.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

5. ஹெல்மெட்டில் செல்பவர்கள் தான் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றனர்

இந்த தவறான கருத்தை பலர் கேட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், சிவப்பு, நீலம் போன்ற அடர்த்தி மிகுந்த நிறங்களிலான ஹெல்மெட்டோ அல்லது வெள்ளை, மஞ்சள் போன்ற அடர்த்தி குறைவான நிறங்களிலான ஹெல்மெட்டோ விபத்துகளை குறைக்க தான் செய்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

இன்னும் சொல்ல போனால், சில பிராண்ட் ஹெல்மெட்களில் நிறுத்து போன்ற எச்சரிக்கை வாக்கியங்களும், ஒளி பிரதிபலிப்பான் போன்ற அம்சங்களும் வழங்கப்படுவதால், ஹெல்மெட் அணியும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற கருத்தை முழுயாக நாங்கள் எதிர்க்கிறோம்.

ஹெல்மெட்டினால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? இந்த 5 விஷயத்த தெரிஞ்சிக்கிட்டா போதும்!

இந்த கருத்துகளை வைத்து நாங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்துகிறோம் என உங்களுக்கு தோன்றலாம். ஹெல்மெட் அணிவதால் சவுகரியம் சற்று குறைந்தாலும், பாதுகாப்பு உணர்வு அதிகமாகிறதா அல்லது குறைகிறதா என்பதை நீங்களே ஒருமுறை உங்களுக்குள் கேட்டு பாருங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Motorcycle Helmets Interesting Facts & Myths
Story first published: Monday, November 16, 2020, 23:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X