மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 10 ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்களை மும்பை போலீசாரிடம் ரோந்து பணிக்காக விற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

ஜப்பானை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான சுசுகி தனது தயாரிப்பு மாடல்களை கார்ப்ரேட்களின் சமூக அக்கறை என்ற முயற்சியின் அடிப்படையில் பல்வேறு நாட்டு போலீஸ் துறைகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

இந்தியாவிலும் குர்கான் மற்றும் சூரத் நகர போலீசாருக்கு இதற்கு முன்னதாக வழங்கியுள்ளது. இந்த வகையில் தற்போது மும்பை போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்குகள் வெள்ளை நிறத்தில் போலீஸ் பைக்குகளுக்கு வழக்கமாக வழக்கப்படும் கூடுதல் ஆக்ஸஸரீகளுடன் காட்சியளிக்கிறது.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படாத இந்த பைக்குகளின் முன்புறத்தில் சிவப்பு மற்றும் நீல பெக்கான்கள் ஹேண்டில்பாருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேற்புறத்தில் கூடுதல் நீளத்துடன் வழங்கப்பட்டுள்ள விண்ட்ஸ்க்ரீன் ஆனது போலீஸ் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் வெள்ளை நிறத்தில் கொண்டுள்ளது.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

இந்த அடையாள வார்த்தைகள் பெட்ரோல் டேங்கின் இரு புறங்களிலும் சிவப்பு நிறத்தில் ஒட்டப்பட்டுள்ளது. பின்புறத்தில் போலீசார் தேவையான பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக சேமிப்பு பெட்டகம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்தின் மேற்புறத்திலும் நீல நிற பெக்கான் கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்கில் பிஎஸ்6 தரத்தில் 249சிசி ஃப்யூல்-இன்ஜெக்டட், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. இலகுவான ஆக்ஸலரேஷன், சிறப்பான ஆற்றல் மற்றும் அதிகப்படியான எரிபொருள் திறனை வழங்கும் விதத்தில் இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டு அனைத்து ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்கிலும் பொருத்தப்படுகிறது.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9300 ஆர்பிஎம்-ல் 26.14 பிஎச்பி பவரையும், 7300 ஆர்பிஎம்-ல் 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பைக்கில் முக்கிய சிறப்பம்சமாக ட்யூல்-சேனல் ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

மும்பை போலீசாரின் ரோந்து பணியில் இணைந்த சுசுகி ஜிக்ஸெர் 250- இனி பைக் ரேஸர்களின் கதி அவ்வளவுதான் போல

இந்த 250சிசி பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.74 லட்சம் அளவில் உள்ளது. இருப்பினும் கூடுதல் ஆக்ஸஸரீகளினால் இந்த பைக் மும்பை போலீசாருக்கு சற்று அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்டிருக்கும். சுசுகி நிறுவனத்தின் 50வது லட்சமாவது வாகனம் என்ற சிறப்பை பெற்ற ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்கின் விலையை சமீபத்தில் தான் ரூ.3,000 அளவில் தயாரிப்பு நிறுவனம் உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Suzuki Gixxer 250 added to Mumbai Police fleet – Part of CSR
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X