புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

இத்தாலிய நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான எம்வி அகுஸ்டா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள நியோ-ரெட்ரோ ஸ்போர்ட் பைக்கின் புதிய இரு நிறதேர்வுகள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

எம்வி அகுஸ்டா நிறுவனம் ரெட்ரோ டிசைனில் சூப்பர்வேலோஸ் என்ற ஸ்போர்ட் பைக் மாடலை புதியதாக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பைக்கிற்கான நிறத்தேர்வுகள் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

இந்த புதிய நிறத்தேர்வுகளை இந்நிறுவனம் கிளாசிக் சிவப்பு நிறத்துடன் கூடுதலான நிறத்தேர்வுகளில் இந்த புதிய பைக் மாடலை காண விரும்பும் எம்வி அகுஸ்டா ரசிகர்களுடன் இணைந்து ஆலோசித்த பின்பு தான் வெளிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை இந்த இரு புதிய பெயிண்ட் தேர்வுகள் என்னென்ன என்பதை நான் கூறவில்லையே.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

ஒன்று, சிவப்பு- சில்வர் என்ற ட்யூல் பெயிண்ட் அமைப்பாகும். இந்த தேர்வில் தங்க நிறத்தில் வழங்கப்படவுள்ள சக்கரங்களுடன் ஃப்ரேம்கள் இந்நிறுவனத்தில் இருந்து இதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த ரேஸிங் பைக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. இரண்டாவது நிற தேர்வு மெட்டாலிக் கார்பன் ப்ளாக் உடன் மெட்டாலிக் டார்க் க்ரே ஆகும்.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

மிலானோ கண்காட்சியில் சூப்பர்வெலோஸ் 800 பைக்கை காட்சிப்படுத்தியபோது பொதுமக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என இருவரிடமும் இருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த இரு நிற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின்படி ஃப்ரேம் தங்க நிறத்தை பெறவுள்ளது.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

இதனால் பைக் நியோ-ரெட்ரோ தீம்-ஐ பெறும் என எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் டிசைன் இயக்குனர் அட்ரியன் மோர்டோன் கூறியுள்ளார். எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸ் மாடலில் தனது பாரம்பரியத்தை தொடரும் விதமாக 1970களில் தயாரிக்கப்பட்ட பைக்குகளின் டிசைன்களை வழங்கியது மட்டுமில்லாமல் எஃப்3 மாடலில் வழங்கப்பட்டிருந்த 799சிசி என்ஜினை எம்வி அகுஸ்டா நிறுவனம் பொருத்தியுள்ளது.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

இன்-லைன் மூன்று-சிலிண்டர் அமைப்பை கொண்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. எதிர்புறமாக சுழலும் க்ரான்ங்ஷாஃப்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் மூன்று முனைகளை உடைய எக்ஸாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

இவற்றுடன் சூப்பர்வெலோஸ் 800 பைக் மாடல் எம்வி ரைட் ஆப் மூலமாக ரைடரின் மொபைல் போனை கண்ணாடி போல் அப்படியே காட்டும் ஸ்மார்ட்போன் இணைப்புடன் இரண்டாம் தலைமுறை 5-இன்ச் டிஎஃப்டி திரை மற்றும் ரைட்-பை-ரைட் போன்ற எலக்ட்ரானிக் தொகுப்புகளையும் கொண்டுள்ளது.

புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

குறைவான எடை மற்றும் சப்-ஃப்ரேம் ஆல் ஆன சிறிய பின்புற ரெஸ்ட்ஸ் உள்ளிட்டவை தேவைப்பட்டால் பைக்கை சிங்கிள்-இருக்கை அமைப்பில் இருந்து இரட்டை-இருக்கை வெர்சனிற்கு மாற்றலாம். மற்றப்படி இந்த புதிய எம்வி அகுஸ்டா பைக்கின் அறிமுகம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
MV Agusta Superveloce Gets Two New Colours
Story first published: Saturday, May 16, 2020, 0:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X