ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

வெர்சிஸ் 1000 எஸ்இ எல்டி+ மோட்டார்சைக்கிளை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைக்கான வெர்சிஸ் 1000 எஸ் பைக்கை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 1000சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

வெர்சிஸ் 1000 எஸ்இ எல்டி+ பைக்கில் உள்ளதை போன்று கவாஸாகி எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷனை இந்த எஸ் வேரியண்ட் பெறவில்லை. இந்த சஸ்பென்ஷன் ஷோவாவின் ஸ்கைஹூக் மின்னணு முறையில் பொருத்தப்பட்ட பயண சவுகரியத்தை சரிசெய்யும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க உதவும்.

ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

இதற்கு மாற்றாக இந்த எஸ் வெர்சன் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பை இரு பக்கங்களிலும் பெற்றுள்ளது. லிட்டர்-க்ளாஸ் டூரர் பைக் வரிசையில் மத்திய வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படவுள்ள புதிய 2021 வெர்சிஸ் 1000 எஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை 14,227 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.12.26 லட்சமாகும். இத்தகைய விலையில் ஐரோப்பாவில் விற்பனையை துவங்கவுள்ள இந்த கவாஸாகி பைக்கை வாங்கும் வாடிக்கையாளர் டூரர், டூரர் ப்ளஸ் மற்றும் க்ராண்ட் டூரர் என்ற மூன்று கூடுதல் ட்ரிம் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றையும் தேர்வு செய்யலாம்.

ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆக்ஸஸரீகளுடன் வழங்கப்படவுள்ளன. அதாவது டூரர் வேரியண்ட் பொருட்களை வைப்பதற்கான பெட்டகம் மற்றும் பெட்ரோல் டேங்க் பாதுகாப்பானுடனும், டூரர் ப்ளஸ் எல்இடி மூடுபனி விளக்குகளுடனும் வழங்கப்படவுள்ளன.

ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

முழுவதும்-நிரப்பட்ட ட்ரிம் ஆக கொடுக்கப்படவுள்ள க்ராண்ட் டூரர் வேரியண்ட் ஜிபிஎஸ் ப்ராக்கெட் மற்றும் ஃப்ரேம் ஸ்லைடர்களை பெற்றுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு யூரோ5-க்கு இணக்கமான 1,043சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் புதிய வெர்சிஸ் 1000 எஸ் பைக்கில் பொருத்தப்படவுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..

இவற்றுடன் 6-அச்சு ஐஎம்யு, கவாஸாகி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கவாஸாகி இண்டலிஜண்ட் ப்ரேக்கிங் சிஸ்டம், ரைடிங் மோட்கள், கவாஸாகி விரைவு மாற்றி, ஸ்மார்ட்போன் இணைப்பு, ஹீட்டட் க்ரிப்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோலையும் தயாரிப்பு நிறுவனம் இந்த 1000சிசி பைக்கில் வழங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Versys 1000 S introduced in Europe at 14,227 euros
Story first published: Thursday, October 15, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X