அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

அப்ரில்லா பிராண்டை இந்தியாவில் பியாஜியோ க்ரூப் சொந்தமாக்க கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

இந்த தகவலை பியோஜியோவின் மற்றொரு பிராண்டான வெஸ்பாவின் ரேசிங் சிக்டிஸ் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின்போது பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டியாகோ கிராஃபி தெரிவித்திருந்தார். இதன்படி இந்த அப்ரில்லா ஸ்கூட்டர் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகவுள்ளது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

இதற்கிடையில் தற்போது வெளியிட்டுள்ள முதல் டீசர் படத்தில் இந்த இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் முன்புறம் நிழல் போல் வெளிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இரட்டை-எல்இடி ஹெட்லைட் அமைப்பில் ஸ்மார்ட் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டிருப்பதை இந்த டீசர் மூலமாக அறிய முடிகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

அதேபோல் ஸ்கூட்டரின் பெரிய விண்ட்ஸ்க்ரீனையும் வெளிக்காட்டும் இந்த டீசர் படத்தில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுக தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வெறுமனே ‘விரைவில் அறிமுகமாகவுள்ளது' என்ற வாக்கியங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

முன்னதாக இந்த அப்ரில்லா மேக்ஸி-ஸ்கூட்டரின் அறிமுகம் இந்த செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சற்று தள்ளிபோகியுள்ளது. எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் அப்ரில்லா பிராண்டின் ப்ரீமியம் தரத்திலான ஸ்கூட்டர் மாடலாகும்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டருக்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள இதில் 160சிசி, சிங்கிள்-சிலிண்டர், 3-வால்வு என்ஜின் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

தற்சமயம் எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு வரும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11 பிஎச்பி மற்றும் 11.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களாக டெலிஸ்கோபிக் ஃபோர்குகள், அலாய் சக்கரங்கள், முன் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக் மற்றும் ஏபிஎஸ்/சிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

இவற்றுடன் எக்ஸாஸ்ட் சூட்டில் இருந்து கால்களை பாதுகாக்க க்ரோம்-தட்டு, சவுகரியத்திற்காக அளவில் பெரியதாக இருக்கை அமைப்பு, இரட்டை-எல்இடி டெயில்லைட், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் உடன் பிளவுப்பட்ட க்ளோவ்பாக்ஸ், விளக்குடன் இருக்கைக்கு அடியில் பெரிய அளவில் சேமிப்பிடம் மற்றும் கருப்பு நிறத்தில் பெரிய அளவில் விண்ட்ஸ்க்ரீன் போன்றவற்றையும் இந்த ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முதல் டீசர் படம் வெளியானது... நவம்பரில் அறிமுகம்...

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் விலை எஸ்ஆர்160-ஐ காட்டிலும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் விலை தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.1.04 லட்சத்தில் இருந்து ரூ.1.13 லட்சம் என்ற அளவில் உள்ளது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia SXR 160 teaser image released, India launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X