டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

மிரட்டும் டிசைனுடன் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய பெனெல்லி 302எஸ் பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

கொரோனாவால் தாமதப்பட்டுப்போன பிஎஸ்-6 பைக் மாடல்களை அடுத்தடுத்த அறிமுகப்படுத்த பெனெல்லி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்து 7 புதிய பிஎஸ்-6 மாடல்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தோம்.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள பெனெல்லி 302எஸ் பைக்கின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் ஆண்டு துவக்கத்தில் புதிய பெனெல்லி 302எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மோட்டார்பீம் தள செய்தி தெரிவிக்கிறது.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

இதுவரை விற்பனையில் இருந்த பெனெல்லி டிஎன்டி300 பைக் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

நேக்கட் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பெனெல்லி 302எஸ் பைக் டிசைனில் வெகுவாக கவரும் வகையில் உள்ளது. வேற்றுக்கிரகவாசிகளுக்கான உருவகப்படுத்த எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பை மனதில் கொண்டு டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பெற்றிருக்கும்.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

புதிய பெனெல்லி 302எஸ் பைக்கில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 300சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 37.5 பிஎச்பி பவரையும், 25.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது?

இந்த புதிய பைக் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். 300சிசி பைக் மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயமான நேக்கட் வகை பைக் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
The new Benelli 302S naked streetfighter bike is expected to arrive in India by early next year.
Story first published: Monday, August 24, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X