இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா நிறுவனம் எஸ் 1000எக்ஸ்ஆர் பைக் மாடலின் அப்டேட் வெர்சனின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய எஸ் 1000எக்ஸ்ஆர் பைக் 2020 ஆம் வருடத்திற்காக முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய தலைமுறை பைக்கை விட மிகவும் ப்ரீமியம் தரத்தில் இருக்கும் இந்த புதிய பைக் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாகவுள்ளது.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

எஸ் 1000எக்ஸ்ஆர் பைக்கின் வழக்கமான நிமிர்ந்த மற்றும் நிதானமான இயக்கத்துடன் கூடுதலான செயல்திறனை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பைக் தான் இதன் புதிய தலைமுறை ஆகும். ஒற்றுக்கொள்கிறோம், கவாஸாகி வெர்ஸஸ் 1000-னும் இதே போன்று அட்வென்ஜர்-கம்-ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் மாடல் தான்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

ஆனால் அதில் இல்லாத செயல்திறன் பண்பு இந்த பிஎம்டபிள்யூ பைக்கில் உள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.18.5 லட்சத்தை விலையாக பெற்றுள்ள இதனுடன் சரிக்கு சமமாக போட்டியிட வேண்டும் என்றால் அதற்கு டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260எஸ் பைக்கால் மட்டுமே முடியும்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கில் இருந்து என்ஜினை அமைப்பை அப்படியே புதிய எஸ் 1000எக்ஸ்ஆர் பைக் பெற்றிருந்தாலும், அதன் என்ஜின் அமைப்பில் உள்ள ஷிஃப்ட்காம் தொழிற்நுட்பத்தை தவறவிட்டுள்ளது. இதன் காரணமாக என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு சற்று குறைவாக 165 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறன் என்ற அளவில் உள்ளது.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

மற்றப்படி பிஎஸ்6 அப்டேட்டால் எந்த ஆற்றலையும் இதன் என்ஜின் இழக்கவில்லை. எலக்ட்ரானிக் ரைடர் உபகரணங்களாக லீன்-சென்ஷிங் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், வீலிங் கண்ட்ரோல், என்ஜின் ட்ராக் டார்க் கண்ட்ரோல் மற்றும் பை-டைரக்‌ஷ்னல் குயிக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

புதிய எஸ் 1000எக்ஸ்ஆர் பைக் மாடல் அட்வென்ஜெர் பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளதால், இந்த பைக்கில் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்றதான 17-இன்ச்சில் அலுமினியம் சக்கரங்கள், ஷோட் உடன் டயர்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்...

எஸ் 1000ஆர்ஆர் பைக்கை காட்டிலும் சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எஸ் 1000எக்ஸ்ஆர் பைக்கில் 150மிமீ ட்ராவல் சஸ்பென்ஷன் அமைப்பாக உள்ளது. பைக்கின் டைனாமிக்கை பொறுத்து இந்த சஸ்பென்ஷன் அமைப்பை எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
BMW S 1000 XR Sports Tourer Teased Ahead Of India Launch: To Rival Kawasaki Versys 1000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X