மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் புரோ சாகச பைக் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் புதிய சாகச ரக பைக் மாடலை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதன் விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் சாகச ரக பைக்குகளுக்கு உலக அளவில் அதிக மதிப்பும், வரவேற்பும் உள்ளது. இந்தியாவிலும் பிரிமீயம் வகை சாகச ரக பைக் மாடல்கள் விற்பனையில் பிஎம்டபிள்யூ சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், தற்போது புதிய சாகச ரக பைக் மாடலை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

அதாவது, மேம்படுத்த்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் புரோ பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா கண்காட்சியில் முதல்முறையாக வெளியிடப்பட்டது.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியா வந்துள்ளது. வடிவமைப்பிலும் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் விதத்திலும், சாகசப் பயணங்களுக்கு ஏற்ற சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் வடிவமைப்பு தாத்பரியங்களுடன் அசத்துகிறது.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, அட்ஜெஸ்ட் வசதியுடன் விண்ட்ஸ்க்ரீன், பேனியர்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் புரோ பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை தொட்டுவிடும்.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்ஆர் புரோ பைக்கில் ரெயின், ரோடு, டைனமிக் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் மற்றும் விருப்பத்தின் பேரில் மாற்றிக் கொள்ளக்கூடிய டைனமிக் புரோ என்ற ரைடிங் மோடும் உள்ளன.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

இந்த பைக்கில் முன்புறத்தில் 45 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டபுள் சைடு ஸ்விங் ஆர்முடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சஸ்பென்ஷன்களும் 150 மிமீ டிராவல் கொண்டதாக இருக்கின்றன. 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சாகசப் பயணங்களை இலகுவானதாக மாற்றும்.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

முன்சக்கரத்தில் இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்சக்கரத்தில் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மோட்டோர் ஸ்லிப் ரெகுலேஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் பைக் மாடலானது ரேஸிங் ரெட் மற்றும் ஐஸ் க்ரே என்ற இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்தியாவில் புதிய சாகச ரக பைக்கை களமிறக்கியது பிஎம்டபிள்யூ!

புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்ஆர் புரோ பைக் மாடலுக்கு ரூ.20.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவும் ஏற்கப்படுகிறது. மிக விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

Most Read Articles

English summary
BMW Motorrad has launched the new (2020) S 1000 XR Pro ADV-tourer motorcycle in the Indian market. The new BMW S 1000 XR is offered in a single 'Pro' variant and is available with a price tag of Rs 20.90 lakh, ex-showroom (India).
Story first published: Thursday, July 16, 2020, 19:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X