சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் 300 எஸ்ஆர் பைக் மாடல் இந்த வருட இறுதிக்குள்ளாக இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

சிஎஃப் மோட்டோவின் இந்த புதிய பைக்கின் அறிமுகம் குறித்து இந்தியன் ஆட்டோ ப்ளாக் செய்தி தளத்தில் இருந்து வெளிவந்துள்ள தகவலில், இந்த பைக் மாடல் வியட்நாம் உள்பட சில சர்வதேச சந்தைகளை சென்றடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

இது 300 எஸ்ஆர் பைக் ஆனது தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ள சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி துவங்கியுள்ளதை குறிக்கிறது. இதன் காரணமாக இந்த 300சிசி பைக்கை இந்திய சந்தையில் இந்த வருடத்திற்குள்ளாக எதிர்பார்க்கலாம்.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

அதேநேரம் கொரோனாவினால் தற்போது நாடு முழுவதும் நிலவும் இக்கட்டான சூழ்நிலையால் இதன் வருகையில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் நாக்டு மோட்டார்சைக்கிளான 300 என்கே-வின் ஸ்டைலிங் பேனல்களால் நிரப்பட்ட வெர்சனாக 300 எஸ்ஆர் பைக் விளங்குவதால் அந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின் அமைப்பை தான் இந்த பைக்கும் பெற்றுள்ளது.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

இந்த வகையில் புதிய 300 எஸ்ஆர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள DOHC செட்அப் உடன் உள்ள 292.3சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 28 பிஎச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 25.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

பைக்கின் மென்மையான மற்றும் ஆற்றல்மிக்க செயல்திறனிற்கு போஸ்ச் நிறுவனத்தின் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் உள்ள இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் நிலையாக இணைக்கப்பட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

இரு ரைடிங் மோட்களுடன் முழுவதும் டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ள 300 எஸ்ஆர் பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆனது ஸ்மோர்ட்போனின் ப்ளூடூத் உடன் இணைக்கும் தொழிற்நுட்ப வசதியை பெற்றுள்ளது.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

பைக்கின் ரைடர் இருக்கை தரையில் இருந்து 780மிமீ உயரத்திலும் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 135மிமீ என்ற அளவிலும் உள்ளன. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகளை இந்த பைக் அதன் நாக்டு வெர்சனான 300 என்கே மாடலை காட்டிலும் அப்டேட்டாக கொண்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

ஏனெனில் 300 எஸ்ஆர் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் தலைக்கீழான ஃபோர்க்ஸும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் ப்ரீலோட் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிப்பதற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் உள்ளன.

சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கிற்கு காத்திருந்தது போதும்... விரைவில் வருகை தருகிறது இந்த 300சிசி பைக்

இவற்றை தவிர்த்து எக்ஸ்ஷோரூம் விலையின் மூலம் சந்தையில் கவனிக்கத்தக்க இடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படும் சிஎஃப் மோட்டோ எஸ்ஆர் பைக்கிற்கு இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 400 பைக்குகள் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
CFMoto 300SR Fully-Faried Motorcycle Expected To Arrive In India By This Year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X