புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

புதிய தலைமுறை அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் புதிய பெயரில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

இந்தியாவின் க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் மிக வலுவான சந்தையை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் மாடல் உண்மையான க்ரூஸர் அனுபவத்தை தரும் மோட்டார்சைக்கிள்களாகவும், மிக சரியான பட்ஜெட்டிலும் கிடைக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள் 350 மற்றும் 500 சிசி மாடல்களில் கிடைத்து வந்தது.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படுகின்றன. புதிய தண்டர்பேர்டு மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 350 சிசி எஞ்சினுடன் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

மேலும், புதிய தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் மீட்டியோர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மோட்டார்சைக்கிளை ஓட்டுபவர் கொடுத்த தகவலின் மூலமாக தெரிய வந்துள்ளது.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் J1C0 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஜே பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பிளாட்ஃபார்மில் வைத்து பல புதிய மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்ட்ர அமைப்புடன் வர இருக்கிறது.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

தற்போதைய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் அதிக அதிர்வுகள் கொண்டதாக இருக்கின்றன. புதிய மாடலில் பொருத்தப்பட இருக்கும் எஞ்சின் இந்த அதிர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் புதிய தொழில்நுட்ப அம்சங்களும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

தனது 500 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புல்லட், கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களை வரும் மார்ச் முதல் விற்பனையில் இருந்து நிறுத்த இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

புதிய பெயரில் வருகிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்!

இந்த நிலையில், 350 சிசி மற்றும் 650 சிசி மாடல்களை மட்டும் விற்பனையில் வைத்திருக்க ராயல் என்ஃபீல்டு முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது. எதிர்காலத்தில் 500 சிசி எஞ்சினுக்கு பதிலாக அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் புல்லட், கிளாசிக் மாடல்கள் வரும் என்று தெரிகிறது.

Source: Youtube

Most Read Articles
English summary
According to report, Royal Enfield Thunderbird will launched with new name in India.
Story first published: Monday, February 24, 2020, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X