2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

அடுத்த மாதத்தில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஐ20 மாடலின் புதிய தலைமுறை காரின் தோற்றம் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது. இந்த புதிய புகைப்படங்கள் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

தற்போது கசிந்துள்ள இந்த புகைப்படங்கள் விரைவில் சந்தையில் களமிறங்கவுள்ள அடுத்த தலைமுறை ஐ20 மாடலின் டிசைன் அமைப்பில் எதையும் மிகைப்படுத்தி காட்டவில்லை. இந்த புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ள உண்மையான ஸ்போர்ட்டியான தோற்றம் மட்டும் தான் காட்டப்பட்டுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

இதனால் இது ஐ20 மாடல் என்று எளிதாக கண்டுப்பிடிக்க முடிந்தாலும், புதுமையான டிசைன் பாகங்களையும், ஹூண்டாய் நிறுவனத்தின் நேர்த்தியான ஸ்டைலுக்கு உண்டான நெறிமுறைகளையும் கொண்டுள்ளது. எனவே தற்போதைய ஐ20 மாடலை விட தாழ்வாக உள்ள இந்த கார் எல்இடி டிஆர்எல் ஹெட்லைட் மற்றும் கருப்பு நிற க்ரில் அமைப்புடன் மிகவும் முரட்டுத்தனமாக காட்சியளிக்கின்றது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

ஆங்குலர் தீம், முக்கோண வடிவிலான ஃபாக் விளக்கு குழிகளுடன் தொடர்ந்துள்ளது. காரின் பக்கவாட்டு பகுதிகள் தற்போதைய மாடலின் வடிவம் மற்றும் நிலைப்பாட்டில் அப்படியே உள்ளன. ஆனால் புதிய ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்கள் மற்றும் க்ரோம் கார்னிஷிங் செய்யப்பட்ட ஜன்னல் லைன்கள் உள்ளிட்டவை புதியதாக கொடுக்கப்பட்டுள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

இந்த க்ரோம் கார்னிஷிங் லைன்கள் பின்புறத்தில் அப்படியே மேலே கொண்டு செல்லப்பட்டு, ரூஃப் முழுவதுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இந்த புதிய ஐ20 மாடல் z-வடிவத்தில் எல்இடி விளக்குகளை பெற்ற பெரிய டெயில்-லைட்களை கொண்டுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

இதன் லைட் பார் இரு டெயில் லைட்களையும் ஒன்றாக இணைத்துள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள மற்றொரு கவர்ச்சிக்கரமான மாற்றமாக டாடா அல்ட்ராஸ் மாடலில் உள்ளதை போன்று பின்புற கதவின் மேற்பாதி பகுதி கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

இதனுடன் பின்புற ஃபாக்ஸ் டிஃப்யூஸரும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஹூண்டாய் நிறுவனம் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரை அனைத்து விதத்திலும் மேம்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டபோது இந்த புதிய ஐ20 கார் உட்புறத்தில் கொண்டிருந்த பாகங்களை தான் கிட்டத்தட்ட இதன் இந்திய வெர்சனும் கொண்டிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

உட்புறத்தில் இந்த கார் முழுவதும் மாற்றியமைக்கப்பட்ட டேஸ்போர்டு, 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

இதனுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூலிங் கனெக்டட்-கார் தொழிற்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பின்புற ஏசியுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், காரை ஸ்டார்ட் மற்றும் நிறுத்துவதற்கு புஷ்-பொத்தான், ஆறு காற்றுப்பைகள் மற்றும் புதிய ஸ்டேரிங் சக்கரம் உள்பட ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களை உட்புறத்தில் இந்த புதிய 2020 மாடல் கொண்டிருக்கும் என நம்பலாம்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை வழங்கும் என தெரிகிறது. இதில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் சமீபத்தில் தான் இந்நிறுவனத்தின் ஐ10 நியோஸ் மாடலுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் கூடுதலாக ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியரபாக்ஸை பெறவுள்ளது. இந்த புதிய மாடலின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் தோற்றம் இதுதானா..? புதிய ஸ்கெட்ச் புகைப்படங்கள் கசிவு

இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என கூறப்படும் இந்த புதிய ஐ20 மாடலுக்கு சந்தையில் போட்டியாக மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா உள்ளிட்ட மாடல்கள் கருதப்படுகின்றன. இதில் மாருதி பலேனோ கார் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் தான் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
New-Gen (2020) Hyundai i20 Revealed (Leaked), Looks Sportier Than Before
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X